Latest News Shruti Haasan PCOS : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர், தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் கொடுத்துள்ள நேர்காணலில் அவர் பேசியுள்ள விஷயங்கள் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ருதிஹாசன்:


நடிகை ஸ்ருதிஹாசன், தமிழில் கதாநாயகியாக நடித்த முதல் படம் ‘7ஆம் அறிவு’. முதல் படத்திலேயே தைரியமாக பல வசனங்களை பேசி, தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையுடன் ஹே ராம் படத்தில் தோன்றிய இவர், தொடர்ந்து வளர்ந்தவுடன் கதாநாயகியாக நடிக்க ஆயத்தமானார். இதைத்தொடர்ந்து இவருக்கு 3 படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் எந்த காரணத்தினாலோ அவருக்கு தமிழ் திரையுலகில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. 


டோலிவுட்டில் கலக்கல்..


நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழில் நடிக்க வருவதற்கு முன்னர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். இதில் அனேகமான படங்கள் வெற்றி பெற, அவருக்கு தொடர்ந்து முன்னணி தெலுங்கு ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்காத படம் என்றாலும், ஸ்ருதிஹாசன் அப்படங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், கடைசியாக ‘பாகுபலி’ பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த ‘சலார்: சீஸ் ஃபயர் பார்ட் 1’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்றாலும், பிற தென்னிந்திய மாநிலங்களில் ஹிட் அடித்தது. 


மேலும் படிக்க | Shruti Haasan: ஸ்ருதி ஹாசனுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா?! சொகு கார்-சொந்த வீடு..இன்னும் என்ன?


ஸ்ருதி ஹாசனுக்கு வந்த அரிய வகை பிரச்சனை:


நடிகை ஸ்ருதி ஹாசன், தான் பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். இந்த பிரச்சனையால் தன்னால் வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கும் அவர், கோடிக்கணக்கான ரூபாயை கொடுத்து படத்தை தயாரிக்கும் இயக்குநர்களிடம் தனக்கு இருக்கும் பிரச்சனையை கூறி படப்பிடிப்பை தள்ளி வைக்க சொல்ல முடியாது என்றும் கூறியிருக்கிறார். இத்தகைய வேதனைகளை பொறுத்துக்கொண்டு, படங்களில் சண்டை காட்சிகள் இருந்தாலும் பாடல் காட்சிகள் இருந்தாலும் தான் சிரித்தபடி நடித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இந்த பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் என்றும், இதனால் பல பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போவதாகவும் கூறியிருக்கிறார். 


பிசிஓஎஸ் என்றால் என்ன? 


பிசிஓஎஸ் (Polycystic ovary syndrome) என்பது, பெண்களுக்கு இருக்கும் ஹார்மோனல் பாதிப்பாகும். இந்த பாதிப்பினால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். சரியான டயட், சரியான உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இல்லை என்றால் இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியாது. ஆனால், இது அரிய வகை நோய் பாதிப்பு இல்லை. 100ல் 40 பெண்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


ஸ்ருதி ஹாசன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தனது வர்க்-அவுட் பயிற்சிையும், பிசிஓஎஸ் பிரச்சனையை சமாளிக்கும் வழியையும் அவர் கூறியிருந்தார். மகிழ்ச்சி ஹார்மாேன்களை உடலில் சுரக்க விட்டாலே இந்த பிரச்சனையை பாதி சமாளித்து விடலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க | ஸ்ருதி ஹாசனின் 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது! காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ