Latest News Actress Sunaina : நடிகை சுனைனா, தனது திருமனம் குறித்து சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை சுனைனாவின் வைரல் பதிவு:


நடிகை சுனைனா, 2008ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர், தொடர்ந்து அவருடனேயே மாசிலாமணி படத்திலும் நடித்திருந்தார். இவர் பெரிய ஹீரோயினாக வருவார் என தமிழ் திரையுலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த காரணத்தினாலோ திடீரென மார்கெட் இழந்தார். 


சுனைனா, சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், யாருடனோ கைக்காேர்த்து பூட்டு இமோஜியை போட்டிருந்தார். தான் நிச்சயம் செய்து கொண்டதைதான் அவர் சிம்பாளிக்காக அப்படி கூறியிருந்தார். இந்த நிலையில் மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது.


மாப்பிள்ளை இவர்தானா? 


சுனைனா இது வரை அவரது காதலர் யார் என்று கூறியிருக்காத நிலையில், அது யார் என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாயை சேர்ந்த பிரபல யூடிபரான காலித் அல் அமேரி என்பவரைத்தான் சுனைனா காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


சுனைனா, தன் பதிவை கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அதே போல யூடியூபர் காலித்தும் ஒரு பெண் கையில் வைர மோதிரம் அணிந்திருப்பது போன்ற பதிவை வெளியிட்டிருந்தார். இதனால், ஒரு வேளை இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. 


சுனைனா, சில நாட்களுக்கு முன்னர் தன் புகைப்படம் ஒன்றை வெெளியிட்டிருக்கிறார். அதில், காலித் “ஹாய்” என்று கமெண்ட் செய்திருக்கிறார். இதற்கு, சுனைனாவும் ஹாய்என்று பதிலளித்திருக்கிறார்.  இவர்களின் நடவடிக்கைகள் தற்போது ரசிகர்களின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இருக்கிறது. 


மேலும் படிக்க | மருத்துவமனையில் பரிதாபமாக கிடக்கும் இளம் நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!



யார் இந்த காலித்?


பிரபல யூடியூபரான காலித், இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் செய்து பிரபலமானவர் ஆவார். இதையடுத்து யூடியூப் சேனலை ஆரம்பித்து தற்போது பல லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 3.1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், முதல் மனைவியுடன் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருப்பினும், இவர்கள் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்தவுடன்தான் இதை உறுதிப்படுத்தப்படும். சுனைனா தற்போது துபாயில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சுனைனாவின் சமீபத்திய படங்கள்..


நடிகை சுனைனா, பட வாய்ப்புகளை பெரிதாக இழக்கவில்லை. தெறி படத்தில் காமியோ கதாப்பாத்திரத்திலும், சமர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சில வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடர் வெளியானது. தற்போது ‘ராக்கெட் டிரைவர்’ எனும் படத்திலும் சுனைனா நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ