ADMK AV Raju Salem Talks About Trisha Kuvathur Controversy: அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு எடப்பாடி பழனிசாமி குறித்து பல புகார்களை அடுக்கி வருகிறார். அவர் சமீபத்தில் கலந்து கொண்ட பத்திரிக்கையளர்கள் சந்திப்பில், த்ரஷா குறித்து கூறியுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினரை குறிப்பிட்டு, கூவத்தூரில் ஒரு நடிகையுடன் கூத்தடித்ததாக கூறியுள்ளார். இது குறித்த சர்ச்சையில்தான் தற்போது த்ரிஷா சிக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருணாஸ் ஏற்பாடு செய்தார்..


நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ்தான், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்காக நடிகைகளை அழைத்து வர ஏற்பாடு செய்ததாக ஏ.வி.ராஜு (AV Raju) தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி, இந்த ஏற்பாட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏ.வி.ராஜு, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் குடிக்கமாட்டார் என்றும் ஆனால் பெண்கள் விஷயத்தில் வீக் என்றும் தெரிவித்துள்ளார். 


கூவத்தூரில் பிரபல நடிகை…


ஏ.வி.ராஜு அந்த பேட்டியின் போது குற்றச்சாட்டுகளை தெரிவிக்கையில், 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ரசிகர்களுக்கு கணவுக்கன்னியாக இருக்கும் ஒருவரின் பெயரைத்தான் குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறிய விஷயங்களுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி கேட்க, அதற்கு அவர், “இதுக்கெல்லாமா ஆதாரம் காட்ட முடியும்” என்று கேட்கிறார். அவர் குறிப்பிட்டிருந்த அந்த பிரபல நடிகையை வெங்கடாசலம்தான் கேட்டதாகவும், அவருக்கு 25 லட்சம் கொடுத்து அழைத்து வந்ததாகவும் ஏ.வி.ராஜு கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரன்வீர் சிங்!


உண்மை குற்றச்சாட்டா? 


ஏ.வி.ராஜு கூறியுள்ள விஷயங்களுக்கு இதுவரை எந்த அடிப்படை ஆதாரங்களும் வெளியாகவில்லை. அந்த ஆதாரங்கள் குறித்து கேட்டதற்கும் தன்னிடம் எதுவும் இல்லை என்றே அவர் கூறினார். அது மட்டுமன்றி, இவர் தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறாரா என்பது தெரியவில்லை. 


சம்பந்தப்பட்ட நடிகை எதுவும் தெரிவிக்கவில்லையே..


ஏ.வி.ராஜு, அந்த பேட்டியில் பேசியுள்ளது குறித்து அதில் கூவத்தூர் சென்றதாக குறிப்பிடப்படும் நடிகை வாய் திறக்காமல் இருக்கிறார். ஆனால் அந்த நடிகைக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பதிவில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  மன்சூர் அலிகான் விஷயத்தில் உடனே கண்டன குரல் எழுப்பிய அந்த நடிகை..இவ்வளவு பெரிய விஷயத்திற்கு ஏன் இன்னும் எதுவும் கூறாமல் இருக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். 


வைரலாகும் செய்தி…நெட்டிசன்களில் மீம்ஸ்!


த்ரிஷா குறித்த இந்த செய்தி பரவத்தொடங்கியதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர், இந்த செய்தி உண்மையா இல்லையா என்று தெரியாமலேயே பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். “எனது கனவுக்கண்ணியின் விலை 25 லட்சம் தானா..” என்றெல்லாம் அவர்கள் கொச்சையாக பதிவிடும் மீம்ஸ்,சமூக வலைதளம் முழுவதும் பரவி வருகிறது ((Trisha). 


மேலும் படிக்க | Actress Jayalakshmi BJP: பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ