Actress Jayalakshmi BJP: பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது.!

Actress Jayalakshmi BJP Arrest: பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலக்‌ஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன? முழு விவரம்!

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 20, 2024, 04:11 PM IST
  • நடிகையும் பாஜக உறுப்பினருமான விஜயலக்‌ஷி கைது.
  • இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் போலீஸார் இவரது இல்லத்தில் சோதனை
  • என்ன நடந்தது? முழு விவரம்!
Actress Jayalakshmi BJP: பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது.! title=

Actress Jayalakshmi BJP Arrest, What is The reason Behind it? பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலக்‌ஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் போலீசார் ஜெயல்க்‌ஷ்மியின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

புகார் என்ன?

சிநேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு மாறி மாறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துக் கொண்டனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஜெயலட்சுமி மற்றும் சினேகன் இடம் விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சினேகன் பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக பாடல் ஆசிரியர் சினேகன் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மீண்டும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும் நடிகை ஜெயலட்சுமி சம்பவம் குறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். 

பின்னர் இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் பாடல் ஆசிரியர் சினேகன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி போட்ட புதிய மனு... அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாடல் ஆசிரியர் சினேகன் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர் அதன் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்திரலையில் இந்த சினேகம் அறக்கட்டளை வழக்கு குறித்து தற்போது சென்னை திருமங்கலம் போலீசார் திருமங்கலம் பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.  சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் வர உள்ளதால் சினேகம் அறக்கட்டளையில் நடத்தப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள், ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து போலீசார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரின் சோதனை நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, தற்போது ஜெயலக்‌ஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்: தெருக்களை அலங்கரித்த கோலங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News