விஜய் நடித்துள்ள GOAT படம் குறித்தும், விஜய்யுடன் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும் அஜித் கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கோட் : 
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் The GOAT - The Greatest Of All The Time (தி கோட்). இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜயின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளதுக்கிறது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் பேட்ச்-வர்க் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் விரைவில் இது முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Movies releasing on August 15 : ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா.. ஆகஸ்ட் 15 லிஸ்ட் பெருசா இருக்கே


விஜய் சொன்ன ரிவ்யூ என்ன?
அண்மையில் படத்தின் கோட் படத்தின் முதல் காபியையும் விஜய்க்கு போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதைப்பார்த்து விஜய், ‘கலக்கிட்ட பா..’ என பாராட்டியிருக்கிறார். மேலும், தான் அவசரப்பட்டு ரிட்டையர்மெண்டை அறிவித்து விட்டதாகவும் உன்னுடன் இன்னும் ஒரு படம் சேர்ந்து பண்ணியிருக்கலாம் என்று வெங்கட் பிரபுவிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது. 


அஜித் கூறிய கருத்து.. உண்மையை உடைத்த வெங்கட் பிரபு:
இந்நிலையில் தற்போது GOAT படம் குறித்து நடிகர் அஜித் கருத்து ஒன்றை கூறியதாக நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துகொண்டுள்ளார். அதன்படி அதில், அஜித் குறித்து பேசிய வெங்கட் பிரபு மங்காத்தா படம் பண்ணும்போதே, அடுத்து விஜய்யை வச்சுப் படம் பண்ணு, ரொம்ப நல்லா இருக்கும் என்று அஜித் சார் கூறினார். GOAT படம் நான் பண்றேன்னு சொன்னதும், 'என்னய்யா, எத்தனை வருஷமா நான் சொல்லிட்டிருக்கேன், சூப்பர் என்றார். மேலும் அருமையா பண்ணுன்னு என்றும் அஜித் கூறியதாக அவர் கூறினார்.


மேலும் படம் ஆரம்பிக்கும் போதே அஜித் சார், மங்காத்தா மாதிரி 100 மடங்கு சிறப்பா இருக்கணும்டா, என்று என்கிட்ட சொன்னார். எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இந்த வார்த்தை அவரிடம் இருந்து வந்திருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார். தற்போது இந்த தகவல் பயங்கரமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Sivakarthikeyan Amaran Making Video: போர் செல்லும் வீரன்.. தீபாவளிக்கு அமரன்! மிரட்டும் மேக்கிங் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ