Bigg Boss 8 Tamil Arnav Eviction Vijay Sethupathi Contemns : நடிகர் கமல்ஹாசன், 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, 8வது சீசனில் இருந்து புதிய ஹோஷ்டாக இருக்கிறார். இந்த சீசன், புதிய ரூல்ஸ் மற்றும் புத்தம் புது பொலிவுடன் தொடங்கியது. இந்த நிலையில் இரண்டாவது வார எவிக்‌ஷனில்அர்னவ் வெளியேறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8 எவிக்‌ஷன்:


பிக்பாஸ் 8 நிகழ்ச்சி Boys vs Girls என்ற போட்டி முனைப்புடன் தொடங்கியது. இதையடுத்து, ஆரம்பித்த முதல் நாளிலேயே எந்த பக்க வீடு உங்களுக்கு வேண்டும் என்று போட்டு வர, இருவரும் விவாதித்து, ஒரு வழியாக சமாதானம் செய்து, தங்களுக்கான பக்கங்களை தேர்வு செய்து கொண்டனர். முதல் நாள் எபிசோடின் முடிவில் 24 மணி நேரத்திற்குள் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி, பிக்பாஸ் 8 வீட்டின் இளம் போட்டியாளரான சாச்சனா, எவிக்ட் செய்யப்பட்டார். ஆனால் வெளியேறப்பட்ட மறுநாளே இவரை வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர். 


முதல் வார எவிக்ஷனாக, பிக்பாஸ் 8 வீட்டிலிருந்து வெளியேறியவர், ஃபேட்மேன் ரவீந்தர். பிக்பாஸ் போட்டியை ரிவ்யூ செய்து வந்த இவருக்கு, இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்து, அனைவரையும் என்டெர்டெயின் செய்து வந்தாலும், மக்களின் வாக்குகள் குறைவாக இருந்ததால் இதிலிருந்து வெளியேற்றப்பட்டார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரவீந்தர் குறித்த ‘இந்த’ உண்மை தெரியுமா உங்களுக்கு?


அர்னவ் எவிக்‌ஷன்:


இந்த வாரம், செல்லம்மா தாெடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அர்னவ் வெளியேற்றப்பட்டார். வெளியில் இருக்கும் போதே முதல் மனைவியை விட்டு விட்டு, உடன் நடித்த நடிகையை காதலித்த சர்ச்சையில் சிக்கிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முன்னர் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினார். இதையடுத்து, வாக்குகள் குறைவாக பெற்ற காரணத்திற்காக இந்த வாரம் நேற்றைய எபிசோடில் எவிக்ட் செய்யப்பட்டார். 


கதறி அழுத அன்ஷிதா:


இரண்டாவது வாரத்தில் அர்னவ், எவிக்ட் ஆன போது அவரது சக ஹவுஸ் மேட்டும், தோழியுமான அன்ஷிதா தேம்பி தேம்பி அழுதார். அர்னவ், வெளியே வந்தவுடன் தனது ஹவுஸ் மேட்ஸிடம் பேசினார். அப்போது, சிலரை குறிப்பிட்ட “ஜால்ரா” என கூறிபிட்டார். மேலும், “என்னடா பன்னிட்டு இருக்கீங்க இங்க..க்ரூப் ஃபார்ம் பண்ணவா வந்தீங்க? நான் உங்க கூட பேசலன்றதுக்காக என்ன தள்ளி வச்சுட்டீங்க..” என அவர் பேசிக்கொண்டே போக, அவரை விஜய் சேதுபதி இடைமறித்தார். பின்னர், “உங்களுக்கு அவர்கள் மீது கோபம் இருந்தால் தனியாக பேசிக்கொள்ளலாம். இப்படி வன்மத்தை கக்க கூடாது. அது அநாகரிகமான செயல்” என்று கூறினார். இதனை அவர் சிரித்துக்கொண்டே சமாளித்தார்.


விஜய் சேதுபதி இப்படி பேசியதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. ஒரு சிலருக்கு இவர் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஹோஸ்டாக மாறியது பலருக்கு பிடிக்கவில்லை. இதனால், “இந்த இடத்தில் கமல்ஹாசன் இருந்திருந்தால் இதை வேறு விதமாக கையாண்டிருப்பார்” என்று கூறி வருகின்றனர்.  


மேலும் படிக்க | பிக்பாஸ் 8-ல் சர்ச்சை ஜோடி அர்ணவ்-அன்ஷிதா! Ex மனைவி போட்ட மாஸ் பதிவு..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ