Bigg Boss 8 Tamil Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில், விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பலர் போட்டியாளர்களாக உள்நுழைந்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 8:


தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள், ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவைகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்று, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 8வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கின்றது. 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், தான் இனி பிபி தொகுப்பாளராக இருக்க முடியாது என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இதற்கு புது ஆங்கராக வந்தார் நடிகர் விஜய் சேதுபதி. 


புதிய தொகுப்பாளர், புதிய வீடு, புது ரூல்ஸ் என இந்த சீசன் பிக்பாஸில் எக்கச்சக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்களாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் பிரபலமடைந்தவர்களாக இருப்பர். சின்னத்திரை நட்சத்திரங்கள், டிஜிட்டல் பிரபலங்கள், சினிமா துணை நடிகர்கள் என பலர் இதில் கலந்து கொள்வர். அந்த வகையில் இந்த சீசனிலும் மக்கள் மத்தியில் பரீச்சயமான முகங்கள் சில உள்நுழைந்திருக்கின்றன.



சம்பள விவரம்..


பிக்பாஸ் போட்டிக்குள் நுழைபவர்களுக்கு ஓரு நாளைக்கு இவ்வளவு என்ற ரீதியில் ஒரு தொகை பேசப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வர். அவர்கள் எத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருக்கிறார்களோ, அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பேமெண்ட் இருக்கும். அந்த வகையில், இந்த பிக்பாஸ் சீசனில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சம்பளம், அவர்கள் எவ்வளவு பிரபலம் அடைந்திருக்கின்றனர் என்பதை பொருத்து அமையும். 


அதிக சம்பளம் வாங்குபவர்கள்...


பிக்பாஸில் இருக்கும் போட்டியாளர்களுள் இரண்டு பேருக்கு மட்டும் அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம். அவர்கள் வேறு யாருமில்லை, ரஞ்சித் மற்றும் ரவீந்தர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். இவர்கள் 100 நாட்கள் வீட்டில் இருந்தால், பரிசுத்தொகை அளவிற்கான சம்பளத்தை பெற்று விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் கண்டிப்பாக ஒரு பெண்தான்! ஏன் தெரியுமா?


25 ஆயிரம் சம்பளம்..


பிக்பாஸில் இருக்கும் சில போட்டியாளர்கள், சுமார் 25 ஆயிரம் வரை சம்பளமாக பெருகின்றனர். அதில் இருவர் ஜாக்குலின் மற்றும் தர்ஷா குப்தா. இருவருமே விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிறருக்கு எவ்வளவு?


அருண் பிரசாத், அன்ஷிதா, சுனிதா, விஜே விஷால், சத்யா, தர்ஷிகா உள்ளிட்டோர் சுமார் 15 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.


குறைவான சம்பளம் பெரும் நபர்  யார்?


பிறருடன் ஒப்பிடுகையில் ஒரு சில பிக்பாஸ் போட்டியாளர்கள் குறைவான சம்பளத்தை பெற்று வருகின்றனர். கானா பாடகர் ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, முத்துக்குமார் ஆகியோர் குறைவான சம்பளம் வாங்குகின்றனராம். இவர்களுக்கு தினமும் ரூ.10 ஆயிரம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: முதல் நாளிலேயே வெளியேறும் பெண் பாேட்டியாளர்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ