Bigg Boss 8 Tamil Eviction This Week : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8:


தமிழில் ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதில், ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும்தான் பல சீசன்களை கடந்து மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், 8 சீசன்களை கடந்த நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ் 8 நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை, தற்போது விஜய் சேதுபதி தாெகுத்து வழங்கி வருகிறார். 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஆரம்பித்தது. முதலில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் பாணியில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியினர் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தனர். ஒரு சிலர் எவிக்ட் ஆகி வெளியேற, அனைவரும் ஒன்றாக விளையாட வேண்டும் என்று ஆர்டர் போடப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்பாேட்டியில் இருந்து இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


டபுள் எவிக்ஷனா? 


வழக்கமாக பிக்பாஸ் போட்டிக்குள் சற்று பிரபலமான டிஜிட்டல் முகங்களையும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களையும், திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களாக நடித்து வருபவர்களையும் போட்டியாளர்களாக இறக்குவர். ஆனால், இந்த முறை, எந்த சேனில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ, அதே சேனலில் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் பிரபலங்களையே போட்டியாளர்களாக இறக்கினர். இதையடுத்து, யாரெல்லாம் ஆரம்பத்தில் வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடுத்தடுத்து எவிக்ட் ஆக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து டபுள் எவிக்ஷன்தான் நடந்து வருகிறது. 


முதலில் டபுள் எவிக்ஷனில் சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி வெளியேற, அவர்களை தொடர்ந்து சத்யன் மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இந்த வாரமும் இரண்டு பேர் எவிக்ஷனில் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!


யார் அந்த இருவர்? 


பிக்பாஸ் நிகழ்ச்சியன் சனி-ஞாயிறு எபிசாேடுக்கான ஷூட்டிங், சனிக்கிழமையான இன்று காலை முதல் நடைபெறும். இந்த வார நாமினேஷனில் இருந்தவர்களில் ராயன், ரஞ்சித், மஞ்சரி ஆகிய மூவர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, முதலில் நடிகர் ரஞ்சித் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று பேரில் இவருக்குத்தான் குறைவான வாக்குகளாம். 



இவரைப்பாேல, டேஞ்சர் லிஸ்டில் இருந்தவர் ராயன். இவரும் இந்த வாரம் எவிக்ட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இவர் வெளியே சென்றால், இவரிடம் இருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ், ஜாக்குலின் கைக்கு செல்லாம். இருப்பினும், ராயன் எவிக்ட் ஆனாரா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


ரசிகர்கள் வருத்தம்!


கவுண்டம்பாளையம் படத்தை எடுத்து கெட்டப்பெயரை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தவர் ரஞ்சித். இந்த வீட்டிற்குள் சென்றவுடன் இவரை பலருக்கு பிடிக்க ஆரம்பித்தது. இதே போல வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸிற்குள் நுழைந்த ராயனையும் மக்களுக்கு பிடித்தது. இப்போது இருவரும் இதில் எவிக்ட் ஆகியிருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள் வருத்தமடைந்துள்ளனர். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ