பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Bigg Boss 8 Tamil Sathya Tharshika Salary Details : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளிேயற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Dec 15, 2024, 10:31 AM IST
  • பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன்!
  • சத்யா-தர்ஷிகா வெளியேற்றம்..
  • இருவரும் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?  title=

Bigg Boss 8 Tamil Sathya Tharshika Salary Details : தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் புதிய  ஹோஸ்ட் ஆக விஜய் சேதுபதி களமிறங்கினார். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது போல, இந்த வாரமும் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

டபுள் எவிக்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில சீசன்களாக டபுள் எவிக்ஷன் நடைப்பெற்று வருகிறது. இந்த முறை 8வது சீசன் பிக்பாஸ் ஆரம்பித்த போது, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அவர்களில் சிலர் வந்த வேகத்திலேயே திரும்ப சென்றனர். கடந்த வாரம் கூட, ஆர்.ஜே.ஆனந்தியும், இளம் நடிகை சாச்சனாவும் டபுள் எவிக்ஷன் காரணமாக பாேட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

தற்போது இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்திருக்கிறது. இதற்கான ஷூட்டிங் நேற்று நடந்தது. இதில், சத்யாவும் தர்ஷிகாவும் எவிக்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், பிக்பாஸில் வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்டனர். இந்த எவிக்ஷன் எபிசோட், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒளிபரப்பப்படுகிறது. 

சம்பளம் எவ்வளவு? 

பாடி பில்டராக இருக்கும் நடிகர் சத்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அண்ணா’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த சீரியலில் இருந்து விலகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு, இவருக்கு ஓரளவிற்கு புகழ் சேர்ந்தது. இவருக்கு பிக்பாஸில் ஒரு எபிசோடுக்கு ரூ.20,000 சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் 69 நாட்கள் வரை பிக்பாஸ் இல்லத்தில் இருந்திருக்கிறார். அதன்படி, இவருக்கு சுமார் 13 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

அதே போல, நடிகை தர்ஷிகாவும் சீரியல் நடிகையாக இருந்தார். தர்ஷிகாவிற்கும் பிக்பாஸில் ரூ.20,000 முதல் 25,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவரும், இந்த வீட்டில் சுமார் 70 நாட்கள் வரை இருந்திருக்கிறார். இதனால் இவருக்கு சுமார் 14 லட்சம் வரை மொத்த சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதுவரை எவிக்ட் செய்யப்பட்டவர்கள்: 

  1. ரவீந்தர்
  2. அர்னவ்
  3. தர்ஷா
  4. சுனிதா
  5. ரியா
  6. வர்ஷினி
  7. சிவா
  8. ஆர்.ஜே.ஆனந்தி
  9. சாச்சனா
  10. சத்யா
  11. தர்ஷிகா

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி:

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக களமிறங்கினார். கமல்ஹாசன் பாேல் இல்லாமல், இவரை மக்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். பிக்பாஸ் போட்டியாளர்களே கூட இவரை எதிர்த்து பேசுவதாக கூறப்படுகிறது. சில நாட்களில் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட இருப்பதை தொடர்ந்து, யார் இதில் வெற்றியாளராக இருப்பார் என்ற கேள்வி தலைதூக்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News