Bigg Boss 8 Tamil First Eviction : 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்டாக இருக்கும் விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


பிக்பாஸ் 8:


தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு,  மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது  சீசன், கோலாகலமாக ஆரம்பமானது.  இந்த முறை, நடிகர்  விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.


தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன். இந்த நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக ஆரம்பமானது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இதில், முதல் எபிசோடின் மமுடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் கொடுத்திருந்தார்.  


நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். 



இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்ஷன், வீட்டுக்குள் இருப்பவர்களுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 


போட்டியாளர்கள், ரசிகர்கள் என யாருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது. புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா?  எனும் விவாதத்துடன் யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 


யார் அந்த பெண் போட்டியாளர்?


பிக்பாஸ் 8 சீசனில், முக்கிய போட்டியாளராக களமிறங்கியவர் சாச்சனா. மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த இவர், இளம் பிக்பாஸ் போட்டியாளர் ஆவார். இன்னும் 20 வயது கூட ஆகாத இவர், பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்திருப்பதை கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால், வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் சாச்சனா வெளியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்தான், அந்த முதல் எவிக்ஷன் என கூறப்படுகிறது. இந்த முடிவு, பலருக்கு சோகத்தை தந்துள்ளது.



மேலும் படிக்க | பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!


போட்டியாளர்களின் லிஸ்ட்:


பிக்பாஸ் 8 போட்டியில், எதிர்பாராத பல நபர்கள் நுழைந்திருக்கின்றனர். இந்த சீசனில் மொத்தம் 9 பெண்கள் 9 ஆண்கள் என சரிசமமாக உள்ளே அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஆண்கள்-பெண்கள் தனித்தனியே தங்க வேண்டும் என்ற விதிமுறையும் இவ்வீட்டில் விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் லிஸ்ட், இங்கே.


  • Fat Man ரவீந்திரன்

  • சாச்சனா (எவிக்டட்)

  • தர்ஷா குப்தா

  • சத்யா

  • தீபக்

  • சுனிதா கோகோய்

  • ஆர்.ஜே.ஆனந்தி

  • ஜெஃப்ரி

  • ரஞ்சித்

  • பவித்ரா ஜனனி

  • சௌந்தர்யா 

  • அருன் பிரசாத்

  • அன்ஷிதா

  • விஜே விஷால்

  • தர்ஷிகா

  • அர்னவ்

  • முத்துக்குமார்

  • ஜாக்குலின்


மேலும் படிக்க | பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ