பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? போட்டியாளர்கள் யார்? விவரம்..
Bigg Boss 8 Tamil Host Contestants Starting Date : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Bigg Boss 8 Tamil Host Contestants Starting Date : தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டு ஷோக்களில், மக்கள் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஒரு சில மட்டுமே. அதிலும், ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. அப்படி, விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமலும், மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் குறித்த தகவல்கள் சின்னத்திரை வட்டாரங்களில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 8:
ஆரம்பத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆங்கிலத்தில்தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர், இந்தியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 2017ஆம் ஆண்டில்தான் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதனை, முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக நடைப்பெற்று வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 8வது சீசனை எட்டியிருக்கிறது.
100 நாட்கள், 20 போட்டியாளர்கள் 20 போட்டியாளர்கள், வேவ்வேறு டாஸ்க், வாரம் ஒரு எவிக்ஷன்..இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கதைச்சுருக்கம். இதில், வாரம் இரண்டு எபிசோடுகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார். அப்போதுதான் குறைவாக வாக்கு வாங்கிய போட்டியாளரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இந்த சீசனின் தொகுப்பாளர் யார்?
பிக்பாஸ் போட்டி பல தென்னிந்திய மொழிகளில் நடைப்பெற்று வருகிறது. அதில், சீசனுக்கு சீசன் சில தொகுப்பாளர்களும் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்தியில் கூட, முதல் சில சீசன்களை வேறு ஒரு நடிகர் தொகுத்து வழங்கினார். அதன் பின்புதான் சல்மான் கான் மாறினார். ஆனால் தமிழில் மட்டும்தான் கமல்ஹாசன் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும், ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் சீசன் 5-ல் சில நாட்களையும் தொகுத்து வழங்கினார். அந்த சமயத்தில் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவர் மாற்றப்பட்டார்.
மேலும் படிக்க | பிக்பாஸ்7:ரன்னர் அப் பட்டத்தை வென்ற மணிச்சந்திரா-மாயா! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?
வரவிருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த சீசனிலும் சம்பளமாக வாங்காத தொகையை தற்போது கமல் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த சம்பளத்தை வழங்குவது பற்றி பிக்பாஸ் குழுவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம்.
தொடங்குவது எப்போது?
கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்சி, அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தொடங்கப்பட்டு வருகிறது. கடைசியாக நடைபெற்ற 7வது சீசன், அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, ப்ரமோ ஷூட்டிங், போட்டியாளர்கள் தேர்வு அனைத்தும் தற்போது நடைபெற, இனி அக்டோபர் மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்கள் குறித்த விவரம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, மக்கள் மத்தியில் சிறிதளவு பிரபலமான ஆனால் பரீட்சியம் ஆன முகங்களை போட்டியாளர்களாக தேர்வு செய்வர். அந்த வகையில் அப்படிப்பட்ட போட்டியாளர்களுக்கான ஆடிஷன் தற்போது நடைப்பெற்று வருகிறது.
இதில், அமலா ஷாஜி, சோனியா அகர்வால், ரோபோ சங்கர், பூனம் பாஜ்வா, அஷ்வின் குமார், சரண்யா மோகன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம் பெறலாம் என கூறப்படுகிறது. உண்மை நிலவரம், பிக்பாஸ் குழுவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே தெரிய வரும்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ