Comedy Actor In Bigg Boss Season 8 Tamil : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, இனி விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இதில் ஒரு பிரபல காமெடி நடிகர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி:


ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, பின்னர் இந்தியில் பல்வேறு போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, 2017ஆம் ஆண்டில் தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை, கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், நிறைய படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டதால், தான் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இயலாது என்றும் கூறினார். இதையடுத்து, விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார். 


வழக்கம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்னர் இருக்கும் ஆரவாரம், இந்த சீசனுக்கும் இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பது யார்? எந்த போட்டியாளருக்கு வெற்றி கிட்டும் என்பது குறித்த அதிக எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களுக்கு எகிறியிருக்கிறது. 


பிரபல காமெடி நடிகரா? 


பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை, அதில் பங்குபெறும் போட்டியாளர்கள் ஓரளவிற்கு பிரபலமானவர்களாக இருப்பர். சிலர் சின்னத்திரை முகங்களாகவும், சிலர் வெள்ளித்திரையில் துணை கதாப்பாத்திரங்களில் அல்லது ஓரிரு படங்களில் நடித்தவர்களாகவும் இருப்பர். ஒரு சிலர், யூடியூப் போன்ற பக்கங்களில் பிரபலமாகி டிஜிட்டல் துறையில் பிரபலமானவர்களாக இருப்பர். ஒரு சிலர், பல வருடங்களுக்கு முன்பு டாப் ஸ்டார்களாக இருந்து, இப்போது எந்த படங்களிலும் நடிக்காதவர்களாக இருப்பர்.  அப்படி, ஒரு காலத்தில் டாப் காமெடியானக இருந்த ஒரு நடிகர் தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. முழு லிஸ்ட் இதோ


யார் அவர்? 


அந்த காமெடியன் வேறு யாருமில்லை, நம் அனைவருக்கும் பிடித்த செந்தில்தான். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் செய்யும் ரகளை காமெடிக்களை நிறையவே பார்த்திருப்போம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கவுண்டமணியும் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை, செந்திலும் எந்த படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் தலைக்காட்டவில்லை. தற்போது, செந்திலுக்கு 73 வயதாகிறது. இந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 



வேறு யாரெல்லாம் இருக்காங்க?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சில முக்கியமான போட்டியாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முக்கியமாக அடிபடும் பெயர்கள் ரோஷினி ஹரிபிரியன், விஜே விஷால், திவ்யா துரைசாமி, பூனம் பாஜ்வா ஆகியோரின் பெயரும் இருக்கிறது. இதில் முக்கியமாக முணுமுணுக்கப்படும் இன்னொரு பெயர், கார்த்திக் குமார். இவருக்கு விஜய் சேதுபதிக்கும் செட் ஆகாது என சிலர் பேசிக்கொள்கின்றனர். எனவே, இந்த முறை பிக்பாஸ் சீசன் 8-ல் கண்டிப்பாக அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோவாம்..யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ