Cooku With Comali 5 Contestants List Latest News In Tamil : தமிழ் ரசிகர்களிடையே அதிக ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. தளபதி நடிகரின் பெயரை கொண்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சமையல் விருந்தையும் சிரிப்பு விருந்தையும் கலந்து பரிமாறுவர். வருடா வருடம், பிக்பாஸ் சீசன் முடிந்தவுடன் குக் வித் கோமாளி தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது (CWC SEas). 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குக் வித் கோமாளி சீசன் 5:


தமிழ் தொலைக்காட்சி சேனல்களை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான சமையல் கலை நிகழ்ச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட டிஷ்ஷை எடுத்துக்கொண்டு, அதை எப்படி சமைக்க வேண்டும் என்று கூறி ஒரு சமையல் கலை நிபுணர் சமைத்து காட்டுவதை பார்த்து பலர் சமையல் கற்றிருப்பர். ஆனால், ஒரு பக்கம் சமையல், ஒரு பக்கம் நகைச்சுவை என மக்களை மகிழ்விப்பதற்கு பஞ்சமே இல்லாத ஒரு நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 


சமையல் தெரிந்த, மக்களுக்கு பரீச்சியமான முகமாக இருப்பவர்களை வரவழைத்து, குக் ஆகவும், சமையலறை பக்கமே சென்றிருக்காத நகைச்சுவை கலைஞர்களை கோமாளியாகவும் மாற்றி ஒன்றாக சேர்ந்து சமைக்க சொல்வதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களிடையே பெரிய ஹிட் அடிக்க, இரண்டாவது சீசன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி 3 மற்றும் 4வது சீசன்களும் கடந்து சென்று விட்டன. தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கவுள்ளது. 


புது நடுவர்…


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் புதுப்புது பரிமானத்துடன் தொடங்கவுள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம், இந்த சீசனை நடத்தப்போவதில்லை. கடந்த 4 சீசன்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், இந்த சீசனில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகரும் சமையல் கலை வல்லுனருமான மதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) செஃப் தாமுவுடன் சேர்ந்து நடுவராக பணியாற்ற இருக்கிறார். இது குறித்த ப்ரமோ, நேற்று (மார்ச் 18) வெளியானது. 


மேலும் படிக்க | அந்நியன் படத்தில் வந்த குட்டி அம்பி நடிகர் விஜய்யின் தம்பியா!? சொல்லவே இல்ல...


போட்டியாளர்கள் யார் யார்?


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், எப்படியும் அதற்கு முன்னர் நிறைவு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாரையேனும் பங்கேற்பாளர்களாக வரவழைப்பர். அந்த வகையில் இதுவரை ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார், ஷெரின் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கின்றனர். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக இருந்த விஷ்ணு விஜய்யை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினுஷா, தினேஷ் உள்ளிட்டோர் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 



இவர்கள் மட்டுமன்றி, டப்பிங் கலைஞரான தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன்,  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, நடன கலைஞர் ஸ்ரீதரின் மகள் அகாஷதா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக வரவுள்ளனராம். 


கோமாளிகள் யார்?


குக் வித் கோமாளியில் கான்ஸ்டண்ட் கோமாளிகள் சிலர் இருக்கின்றனர். அவர்களில் குரேஷி, புகழ், சுனிதா உள்ளிட்டோர் இந்த கோமாளிகளாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சில புது கோமாளிகளும் இதில் களமிறக்கப்பட உள்ளதாக பேசிக்கொள்கின்றனர். முழு விவரங்களும், சேனல் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட பின்பு தெரிய வரும்.


மேலும் படிக்க | Vijay: பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்! ஆரவார அலப்பறையுடன் வரவேற்ற ரசிகர்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ