குக் வித் கோமாளி சீசன் 5.. வெளியானது போட்டியாளர்களின் லிஸ்ட்

குக் வித் கோமாளி கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் எப்போது ஆரம்பம் என்று கேள்வி எழுந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 23, 2024, 02:45 PM IST
  • குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்போது தொடங்கும்
  • நடிகை வடிவுக்கரசி, குக்காக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி சீசன் 5.. வெளியானது போட்டியாளர்களின் லிஸ்ட் title=

குக் வித் கோமாளி சீசன் 5 அப்டேட்: குக் வித் கோமாளி தொடர் இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது ஐந்தாவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். 

குக் வித் கோமாளி தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது என கூறலாம். சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். அத்தகைய வெற்றிக்கு பிரதான காரணம் என்னவென்றால், அதில் வரும் கோமாளிகள்தான். 

மேலும் படிக்க | Ethirneechal Actress: விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் முடிவுக்கு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி (Cooku With Comali Season 5) எப்போது தொடங்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது என்றெல்லாம் பேச்சுகள் எழத் தொடங்கின. ஆனால் அதெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான ஆள் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறதாம்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை வழக்கம்போல் ரக்சன் (VJ Rakshan), விஜே மணிமேகலை (VJ Manimegalai) போன்றோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். அதுபோல ஒரு சில கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருகிறார்கள். குக்குகள் மட்டும்தான் ஒவ்வொரு சீசனிலும் மாறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களிடம் சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு சில பிரபலங்களின் பெயர் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் இந்த சீசனில் நடிகை வடிவுக்கரசி, குக்காக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் நடிகையும், டப்பிங் கஞைருமான தீபா வெங்கட் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அதை தொடர்ந்து நடிகையாகவும் டப்பிங் கஞைராகவும் இருக்கும் தீபா வெங்கட் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகளான அக்ஷதா அவங்களும் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் தான் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை, இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 'கேப்டன் மில்லர் அப்பட்டமான திருட்டு... நாவலில் இருந்து கதை அப்படியே காப்பி' - அதிர்ச்சி தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News