Ethirneechal Actress Madhumitha Accident Latest News: தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான தொடராக உள்ளது, எதிர்நீச்சல். இந்த தொடரில் கதாநாயகியாக மதுமிதா என்பவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நாயகி:


எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதா, சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர், சில நாட்களுக்கு முன்புதான் புதிதாக ஒரு கார் வாங்கியிருந்தார். அதற்கான வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சோழிங்கநல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு வழி சாலையில், தவறான பாதையில் இவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்படி சென்று கொண்டிருக்கும் போது, எதிரில் பைக்கில் வந்த காவல் அதிகாரி இவர்களின் காரில் மோதி தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்த விபத்தில் சிக்கிய காவல் அதிகாரி, படுகாயம் அடைந்ததாகவும் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. 


ஆண் நண்பருடன் கைது?


விபத்தை ஏற்படுத்திய மதுமிதா, அவரது ஆண் நண்பருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், இருவருமே மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்த சில நிமிடங்களுக்குள்ளாக காவல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்ததாகவும், அப்போது மதுமிதாவின் நண்பருக்கும் காவல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மதுமிதாவின் கார் காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | காசோலை வழக்கில் அஜித் பட தயாரிப்பாளர் கைது! பின்னணி என்ன?


மதுமிதா கூறியது என்ன? 


நடிகை மதுமிதா, இது சின்ன விபத்துதான் என்றும், தனது நண்பரால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இது குறித்து பெரிதாக பேச எதுவும் இல்லை என்றும் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


எதிர்நீச்சல் தொடர்:


சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் தொடர், எதிர்நீச்சல். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில், மதுமிதாதான் கதாநாயகியாக நடித்து வருகிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகள், ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிரான கருத்துகள் என பல விஷயங்கள் இந்த தொடரில் அலசப்படுகிறது. 


எதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் எழுதி, இயக்கி, நடித்து வருகிறார். கனிகா, மதுமிதா, ஜனனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தவிர ஹரிபிரியா இசை, கனிஹா, விபு ராமன், பிரிய தர்ஷினி, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகின்றனர். இதில், ஹைலைட்டான கதாப்பாத்திரமாக இருந்தவர், ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து. இவர், சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பிறகு இந்த கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். ஆனாலும், மாரிமுத்துவை ஆதி குணசேகரனாக பார்த்து வந்தவர்களுக்கு, இவரை அப்படி பார்க்க முடியவில்லை. இதுவே இந்த தொடருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மதுமிதா இது போன்ற சாலை விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


மேலும் படிக்க | போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ