Latest News Kanguva Trailer Tamil : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம், கங்குவா. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலர் நல்ல விமர்சனங்களையும் ஒரு சிலர் குழப்பமான விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா படத்தின் டிரைலர்:


கங்குவா திரைப்படம் குறித்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டே வெளியான போதும், கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போடப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டில் இருந்து இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கோவா, கேரளா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த படம், சூர்யாவிற்கு 42வது படமாகும்.



தற்போது கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. சூர்யா முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக பாபி டியோல் நடித்திருக்கிறார். கில்லர் படக்காட்சிகளும், தெறிக்கவிடும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமையும் என்று டிரைலர் பார்த்த ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கு பார்ப்போம். 


சிறுத்தை சிவாவை நம்பலாமா? 


கங்குவா படத்தின் டிரைலரை பார்த்து ஒரு ரசிகர் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார். அதில், சிறுத்தை சிவாதான் விவேகம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியிருப்பதாகவும் இதனால் இவரை நம்பலாமா வேண்டாமா என்பது தனக்கே புரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.


 



மேலும், கங்குவா படத்தின் டிரைலர் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


கோலிவுட்டிற்கு ஒரு பாகுபலி..


தெலுங்கில் உருவாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம், பாகுபலி. அந்த படத்தை கங்குவா படத்துடன் கம்பேர் செய்து ஒரு ரசிகர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். 



கோலிவுட்டிற்கு ஒரு பாகுபலி கிடைக்கப்போகுது என அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க | Kanguva teaser: சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் டீசர் வெளியானது


நடிகர்களின் காஸ்டியூம்..


கங்குவா திரைப்படத்தை பலர் பெரிதாக பேச காரணம், அதில் இடம் பெற்றிருக்கும் நடிகர்களின் அந்த கால ஆடைகள்தான். இது குறித்து ஒரு ரசிகர் கருத்தினை தெரிவித்திருக்கிறார். 



விஷுவல் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், பாபி டியோல் மற்றும் சூர்யாவின் லுக் நன்றாக இருப்பதாகவும் பேசியிருக்கிறார். படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


டிரைலரில் கார்த்தி!


நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, கங்குவா திரைப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவரது வருகையும் டிரைலரில் இடம் பிடித்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மொத்தத்தில், கங்குவா படத்தின் டிரைலர் பலரை வாய் பிளக்க செய்துள்ளது. படம், வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | கங்குவா படத்தின் முதல் விமர்சனம்: மெய்சிலிர்த்த பாடலாசிரியர் விவேகா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ