கங்குவா படத்தின் முதல் விமர்சனம்: மெய்சிலிர்த்த பாடலாசிரியர் விவேகா

Kanguva Movie First Review: சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல பாடலாசிரியர் விவேகா வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2024, 01:46 PM IST
  • சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படம்.
  • சூர்யா இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.
கங்குவா படத்தின் முதல் விமர்சனம்: மெய்சிலிர்த்த பாடலாசிரியர் விவேகா title=

Kanguva Movie First Review: சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல பாடலாசிரியர் விவேகா வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட விமர்சனம் தற்போது வெகு அளவில் வைரலாகி வருகின்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படம். கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படம் 10 இந்திய மொழிகளில் 3டியில் வெளியாகிறது. அதுமட்டுமின்றி 'கங்குவா' திரைப்படம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு இடையே நடக்கும் கதை போல் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகும் படம் கங்குவா. இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார்.

இந்த படத்தில் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, தீபா வெங்கட், ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் முன்பே வெளியிட்டனர். அதில் சூர்யா இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் காணப்பட்டார். 

மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?

மேலும் இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கங்குவா படம் பார்த்த பாடல் ஆசிரியர் விவேகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம், இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம். இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமையாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சூர்யா ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News