ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
Ghilli Re Release First Day Collection : 2004ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கில்லி திரைப்படம் தற்பாேது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பினை கொடுத்துள்ளனர்.
Ghilli Re Release First Day Collection : கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம், கில்லி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், 20 வருடங்கள் கழித்து இன்று (ஏப்ரல் 20) ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பினை கொடுத்து வருகின்றனர்.
கில்லி:
தெலுங்கில் மகேஷ் பாபு-பூமிகா நடித்திருந்த படம், ஒக்கடு. 2003ஆம் ஆண்டில் இப்படம் வெளியானதை தொடர்ந்து, தமிழில் 2004ஆம் ஆண்டு ‘கில்லி’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் விஜய் ‘சரவண வேலு’ எனும் கதாப்பாத்திரத்தில் ஹீராேவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தனலட்சுமி எனும் கேரக்டரில் த்ரிஷா நடித்திருந்தார். மதுரையில் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்லி லவ் டார்ச்சர் செய்கிறான் முத்துப்பாண்டி. தன் உயிரையும், வாழ்க்கையையும் காத்துக்கொள்ள ஓடும் தனலட்சுமியை, வேலு காப்பாற்றிவிடுகிறார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
முதல் முறை பெற்ற வசூல் எவ்வளவு?
2004ஆம் ஆண்டு கில்லி படம் வெளியான போது, அப்போதே விஜய் பெரிய ஹீரோதான். இப்படம் பிரம்மாண்ட அளவில் எடுக்கப்பட்டதால், இதன் மீது அன்றைய ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அனைவரும் நினைத்தது போலவே படம் ஆக்ஷன், காதல், காமெடி, பாடலகள் என பலவித மசாலாக்களை கலந்து இருந்ததால் பாக்ஸ் ஆபிஸில் சக்கை பாேடு போட்டது. இதனால், இப்படம் அப்போதே சுமார் ரூ.50 கோடி வசூலை பெற்றது. (20 வருடங்களுக்கு முன்னர் 50 காேடி வசூல் எல்லாம் பெரிய விஷயம்) அது மட்டுமன்றி, தியேட்டர்களில் 200 நாட்களை கடந்தும் ஓடியது. இதையடுத்து, இப்படம் இன்று மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
600 தியேட்டர்களில் கில்லி…
கில்லி படத்தை ஏற்கனவே பல முறை தமிழ் தொலைக்காட்சிகளில் ரிபீடட் ஆக பார்த்திருந்தாலும், இப்படம் ரீ-ரிலீஸ் என்று கூறியவுடன் ரசிகர்கள் குஷியாகி விட்டனர். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறிதளவு மெருகேற்றப்பட்ட நிலையில் இப்படம் வெளியாகியிருக்கிறது. கில்லி திரைப்படம் உலகளவில் ப்ரீ-புக்கிங்கிள் மட்டும், சுமார் ரூ.3 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய்யின் ‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அட, இவரா?
முதல் நாள் வசூல்..
கில்லி திரைப்படத்தின் முதல் நாளில் வசூல், உலகளவில் சுமார் ரூ.6 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள், முதல் காட்சியில் கில்லி படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு வெளியில் டிக்கெட் வாங்குவதற்காகவும் தியேட்டருக்குள் செல்வதற்காகவும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.
கான்சர்டாக மாறிய தியேட்டர்கள்..
தமிழ் சினிமாவை பொறுத்த வரை, கடந்த சில மாதங்களாக பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் வெளியான பாேது, ரசிகர்கள் அதை மினி ஹாரிஸ் ஜெயராஜ் கான்சர்ட்டாகவே மாற்றினர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கும் அதே கதைதான். அந்த படங்களின் வரிசையில் தற்போது கில்லி திரைப்படமும் சேர்ந்திருக்கிறது. படத்தில் வரும் டைலாக்குகள் முதற்கொண்டு, பாடல்கள் வரை அனைத்திற்கும் ரசிகர்கள் பிசகாமல் வாயசைக்கின்றனர். இனி புது படங்கள் திரைக்கு வரும் வரை, இது போன்ற ரீ-ரிலீஸ்கள்தான் சினிமா ரசிகர்களை கொண்டாட்ட கடலில் குளிக்க வைத்து வருகிறது.
மேலும் படிக்க | தளபதி விஜய்யை பார்த்து அரசியல் ஆசையா? விஷால் பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ