விஜய்யின் ‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அட, இவரா?

Ghilli Movie First Choice : விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படங்களுள் ஒன்று, கில்லி. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 26, 2024, 08:15 AM IST
  • கில்லி படம் 2004ஆம் ஆண்டு வெளியானது
  • 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் இது
  • இதில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
விஜய்யின் ‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அட, இவரா? title=

Ghilli Movie First Choice : தெலுங்கு மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம், ஒக்கடு. மகேஷ் பாபு, இதில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இதனை தமிழிலும் ரீ-மேக் செய்தனர். தமிழில் ‘கில்லி’ என்ற பெயரில் உருவான இந்த படத்தில், விஜய் கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் என்றுதான் நமக்கு தெரியும். ஆனால் இவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு முதலில் தேர்வு செய்யப்பட இருந்த நடிகர்கள் யார் தெரியுமா?

கில்லி படத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர்கள்..

தமிழில் ரீ-மேக் செய்யப்பட்ட கில்லி திரைப்படம், 2004ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் வெளியான ‘ஒக்கடு’ படத்தை குணசேகரன் இயக்க, தமிழில் இயக்குநர் தரணி இப்படத்தை இயக்கினார். இவர், கில்லி படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முதலில் அணுகியது விஜய்யை அல்ல, அப்போது டாப் ஹீரோவாக இருந்த விக்ரமைதானாம். 2000 காலக்கட்டங்களில்தான் தற்போது டாப் ஹீராேக்களாக இருப்பவர்கள் வளர்ந்து கொண்டிருந்தனர். அப்போது, நடிகர் விக்ரம் நடித்திருந்த படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆபிஸ்ஸில் ஹிட் அடித்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தன. இதனால் விக்ரமை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் இயக்குநர் தரணி யாேசித்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

நாயகியாக நடிக்க இருந்தவர்..

2000ம் காலங்களில் டாப் ஹீரோயின்களில் முதல் இடத்தில் இருந்தவர், ஜோதிகா. இவர் ஹீரோயினாக நடித்து வந்த படங்களும் தொடர்ந்து வரிசையாக ஹிட் அடித்தன. விக்ரமுடன் தூள் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் வெற்றி பெற்றதுடன் இவர்களின் கெமிஸ்ட்ரிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இவரை விக்ரமுக்கு ஜோடியாக கில்லி படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Indraja Shankar : புதிதாக திருமணம் ஆன இந்திரஜா சங்கருக்கு நடிகர் சூரி கொடுத்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

நடிக்காதது ஏன்?

இயக்குநர் நினைத்தது போல, விக்ரமையோ அல்லது ஜோதிகாவையோ கில்லி படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. காரணம், இருவருமே வெவ்வேறு படங்களில் கமிட் ஆகி விட்டனர். அதன் பிறகுதான் ஹீரோவாக நடிகர் விஜய்யும், நாயகியாக த்ரிஷாவும் நடித்தனர். கதைக்கு ஏற்றவாறு இருவரும் பொருந்தி போக, படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, அப்போதே 50 கோடி வரை கலெக்ட் செய்திருந்தது. 

Vikram And Jyothika

விக்ரம்-ஜோதிகா நடித்த படங்கள்..

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கில்லி திரைப்படம் வெளியாக, அதே ஆண்டு ஜூன் மாதம் ‘அருள்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

ரீ-ரிலீஸ் ஆகும் கில்லி..

பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்த படங்கள் சில, தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. முத்து, ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் மெருகேற்றப்பட்டு ரீ-ரிலீஸில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சில விஜய்-அஜித் படங்கள், மீண்டும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. கில்லி படம் வெளியாகி வரும் ஏப்ரல் மாதம் 20வருடங்கள் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து, இப்படம் அடுத்த மாதம் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Rajinikanth : பேரன்களுடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்! க்யூட் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News