இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்! ஒரு நாளைக்கு இவ்வளவா?
Bigg Boss 18 Shrutika Arjun Salary Per Day : தமிழ் ரசிகர்கள் மத்தியில் டிஜிட்டல் திரை மூலம் பிரபலமான ஸ்ருதிகா, சமீபத்தில் வட இந்தியாவில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து, அவரது சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Bigg Boss 18 Shrutika Arjun Salary Per Day : 2000 காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து, பிரபலமானவர் ஸ்ருதிகா. பழம்பெரும் நடிகர் தேங்கா சீனிவாசனின் பேத்தியான இவர் இரண்டு வருடங்கள் சினிமாவில் நடித்த பிறகு மொத்தமாக திரையுலகம் பக்கமே வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற இவர் அங்கும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தார்.
பிக்பாஸ் 18:
தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தபோது, அதே நேரத்தில் இந்தியிலும் பிக்பாஸ் 18 வது சீசன் ஆரம்பித்தது. இதில் பலரும் எதிர்பார்க்காதவாறு இந்த நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் ஸ்ருதிகா. போட்டிக்குள் சென்ற நாள் முதல், தனத்தை இயல்பான பேச்சால் பலரை ஈர்த்தார்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சல்மான் கானே, இவரால் ஈர்க்கப்பட்டார். இதுவரை தமிழ் திரையுலகை சேர்ந்த யாரும், இந்தி பிக்பாஸில் இத்தனை நாட்கள் இருந்தததில்லை. ஆனால் ஸ்ருதிகா, பல வாரங்கள் நாமினேட் செய்யப்பட்டதையும் தாண்டி, அத்தனை வாரங்களும் சேவ் செய்யப்பட்டார். அதே போல, எத்தனை பேர் தன்னை டார்கெட் செய்த போதும் அனைவரையும் அசால்டாக ஒரே ஆளாக ஹேண்டில் செய்தார்.
ஸ்ருதிகாவிற்காக அந்த இந்தி பிக்பாஸே, பல முறை இந்தியில் பேசினார். ரசிகர்களை தனது இயல்பால் கவர்ந்த ஸ்ருதிகா, கடந்த சில வாரங்களாக நிறைய நெகடிவிட்டியை எதிர்கொண்டார். ஒரு குறிப்பிட்ட பாேட்டியாளர் வெளியேற இவரை மட்டும் பலர் காரணம் காட்டியதால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட முடிவடைய இருக்கிறது. ஸ்ருதிகா, டாப் 5 போட்டியாளர்களுள் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 95 நாளில் எவிக்ட் ஆகி வெளியேறி இருக்கிறார்.
வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கு பெறும் அனைவருக்குமே, ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை என்ற வீதம் மொத்தமாக இறுதியில் சம்பளம் வழங்கப்படும். இது, ஒவ்வொரு மொழி பொருத்தும் மாறுபடும். இந்தியில் வியூவர்ஸ் அதிகம் என்பதால், இதில் பங்கு பெறுபவர்களுக்கு, தமிழ் பிக்பாஸை விட அதிகமாகவே சம்பளம் வழங்கப்படும். அப்படி, ஸ்ருதிகாவிற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
யார் இந்த ஸ்ருதிகா?
ஸ்ருதிகா, முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் ஸ்ரீ. இந்த படத்தில் நடித்த போது அவர் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து ஆல்பம் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரமாகவும், நள தமயந்தி படத்தில் மாதவனின் முறை பெண்ணாகவும் நடித்திருந்தார். இவரை இன்னும் பிரபலப்படுத்திய படம், தித்திக்குதே. இந்தப் படத்தில் இவர் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
2 ஆண்டுகளோடு சினிமா பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்ருதிகா, மீண்டும் ரசிகர்களுக்கு அறிமுகமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகத்தான். இதன் பிறக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்!
மேலும் படிக்க | இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை! பலருக்கு பிடித்தவர்..யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ