Actress Sachana Namidass Job Before Bigg Boss 8 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 1 வாரம் ஆகிறது. அதற்குள் இந்நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதில், முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருப்பவர் சாச்சனா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை நட்சத்திரமா? இளம் பெண்ணா?


நடிகை சாச்சனாவை, அனைவரும் மகாராஜா படத்தின் மூலம் அறிவர். அதில், சிறுமியாக நடித்திருந்த இவரை பார்த்த ரசிகர்கள், உண்மையில் இவர் பள்ளி செல்லும் குழந்தைதான் என நினைத்துக்கொண்டனர். ஆனால் உண்மையில் இவர் ஒரு இளம் பெண். இவருக்கு 21 வயது ஆகிறது. மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடிப்பதற்கு முன்னரே இவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். கெளதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆகஸ்ட் 16, 1947 படம்தான் அது. இந்த படத்தில் அவர், மாறுவேடமிட்டு பின்பு வெள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ளும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 


பிக்பாஸில் போட்டியாளர்:


தமிழ் பிக்பாஸின் எட்டாவது சீசன், கடந்த வாரம் தொடங்கியது. இதில், நடிகர் விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு பதிலாக புதிய ஹோஷ்டாக களமிறங்கியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருந்தவர், சாச்சனா. ஆனால் பிக்பாஸிற்கு சென்ற அடுத்த நாளே 24 மணி நேர நாமினேஷனில் வெளியேற்றப்பட்டார். பின்பு, அந்த வாரத்திலேயே மீண்டும் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்நிகழ்ச்சியின் வீக்-எண்ட் எபிசோட் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய அவர் சாச்சனாவிற்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எதுவும் கொடுக்கவில்லை. 


வந்த புதிதிலேயே பிக்பாஸில் இருந்து வெளியேறி, பின்பு மீண்டும் உள்ளே நுழைந்து கவனம் ஈர்த்த சாச்சனா, அங்கு இருப்பதிலேயே இளம் போட்டியாளராக இருக்கிறார். இவர், பிக்பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் உள்ளே வந்ததும், முதல் வேலையாக அனைவரையும் விமர்சித்தார், இதனால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏளனத்திற்கும் ஆளானார்.



மேலும் படிக்க | இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!


உண்மையில் செய்யும் வேலை:


சாச்சனாவின் விளையாட்டு வியூகம், அவர் விளையாடும் விதம் என்னென்ன என்பது இன்னும் பலருக்கு தெரியவில்லை. இருப்பினும், இப்போதைக்கு பெரிதாக எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருப்பதால் அவர் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் இவர் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சாச்சனா, உண்மையில் பள்ளி செல்லும் சிறுமியோ அல்லது கல்லூரிக்கு செல்லும் பெண்ணோ அல்ல. 21 வயது நிரம்பியிருக்கும் அவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இது குறித்து பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னர் அவர் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதில், அவர் சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், கிடைக்கும் லீவில்தான் படங்களில் நடித்து வருவதாகவும் கூறியிருந்தார். “பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் வேலையை விடுவீர்களா?” என்ற கேள்விக்கு அவர், “அதற்கெல்லாம் வாய்ப்பில்லை” என்று கூறியிருந்தார். தற்போது பிக்பாஸிற்கு வருவதால், அவர் தனது வேலையை ரிசைன் செய்திருப்பார் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரவீந்தர் குறித்த ‘இந்த’ உண்மை தெரியுமா உங்களுக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ