கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு! ஜுயர்கள் செய்த சர்ச்சை..

Ilayaraja Stopped By Jeeyar In Srivilliputhur Temple : இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காேவில் கருவறைக்குள் அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ilayaraja Stopped By Jeeyar In Srivilliputhur Temple : தமிழ் திரையுலகம் மட்டுமன்றி, இந்திய திரையுலகிற்கே இசை ஜாம்பவானாக விளங்குபவர், இளையராஜா. இவர், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வைரலாவது உண்டு. ஆனால், தற்போது அவருக்கு நடந்திருக்கும் ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்றது.
.இதில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை வரவேற்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டாள் கோவில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர்.
இளையராஜா மற்றும் உடன் இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஐயர், ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயர் ஆகியோர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்கி கோவில் யானை வரவேற்ப்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இளையராஜா கோவிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார் அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள்.இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டங்கள் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த இளையராஜா கருவறைக்குள் சென்றது அங்கு பரபபாக பேசப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெளியில் வந்து . வட பத்திர சாய் சன்னதி மற்றும் பெரிய பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து பின்னர் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | கைவிடப்படும் இளையராஜாவின் பயோபிக் படம்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இளையராஜாவுக்கே சர்ச்சையா?!
வழக்கமாக, எங்கு சென்றாலும் இளையராஜாதான் ஏதேனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, வம்பை விலைக்கு வாங்கி வந்தார். இவரது பல மேடை பேச்சுகள், ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்ததுண்டு. ஆனால், அவருக்கே கோவிலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ