மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட பாடகி பி.சுசீலா! இப்போது எப்படி இருக்கிறார்?
Latest News P Susheela Hospitalized : பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா, நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை இப்போது எப்படியிருக்கிறது தெரியுமா?
Latest News P Susheela Hospitalized : ‘இந்திய சினிமாவின் நைட்டிங்கேல்’ என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர், பி.சுசீலா. இவரது குரலில் எண்ணற்ற பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியானது.
திடீர் உடல் நலக்குறைவு:
பி.சுசீலா, கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் நேற்று இரவு 9 மணி அளவில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டதாகவும் இதையடுத்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அவரது உடல்நிலைக்குறித்து ரசிகர்கள் வினவி வந்தனர். பி.சுசீலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மிகவும் நலமாக உள்ளார் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
1935ஆம் ஆண்டு, நவம்பர் 13ஆம் தேதி பிறந்த பி.சுசீலாவிற்கு, தற்போது 88 வயது ஆகிறது. இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக மறுத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பலர், இவர் உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் பதிவுகள வெளியிட்டு வருகின்றனர்.
யார் இந்த பி.சுசீலா?
இப்போது தங்களின் 20களில் இருப்பவர்களின் தாத்தா-பாட்டி, தாய்-தந்தை ஆகியோர் பி.சுசிலாவின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்களாக இருப்பர். மூன்று தலைமுறைகளை, தனது பாடலை கேட்க வைத்த பாடகியாக இருக்கும் இவர், ஆந்திராவில் பிறந்தவர்.
சுசிலாவின் குடும்பமே இசை கலை விரும்பிகளாக இருந்ததால், அவரும் முறையாக இசைப்பயிற்சி பெற்று மேடை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பாடல்கள் பாடி வந்தார். அதன் பிறகு, 1950ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் நுழைந்த இவர், இந்திய திரையுலகில் இருக்கும் பல்வேறு இசை ஜாம்பவான்களின் இசையில் பாடல்கள் பாடியிருக்கிறார்.
‘உயர்ந்த மனிதன்’ படத்திற்காக இவர் பாடிய “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..” பாடலுக்காக இவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. இந்தியாவிலேயே, முதன் முதலில் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி என்ற பெருமையும் இவருக்கு சொந்தம்.
மேலும் படிக்க | வதந்தியை நம்ப வேண்டாம்- பி.சுசீலா
தென்னிந்திய மொழிகளில் முன்னணி பாடகி..
பி.சுசீலா, பின்னணி பாடகியாக இருந்தாலும் அனைவரை காட்டிலும் முன்னணி பாடகியாக இருந்தார். 50களில் ஆரம்பித்த இவரது பயணம், தென்னிந்தியா முழுவதும் தொடர்ந்தது. தமிழ், தெலுங்கு மட்டுமன்றி, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு, படுக உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழை சரளமாக பேசும் இவர் இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளையும் கற்றவர்.
பழம்பெரும் நடிகைகளுக்காக பாடியவர்..
பி.சுசீலா பாடிய பெரும்பாலான பாடல்கள், சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட பழம் பெரும் நடிகைகளின் பெரும்பாலான படங்களில் பாடியிருக்கிறார். சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் பி.சுசீலா, இதற்காக உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க | 'நீங்கள் எனக்கு உதவுவீர்களா?': பி.சுசீலா ஏ.ஆர்.ரஹ்மானிடம் வைத்த சுவாரசியமான கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ