Mamitha Baiju Second Tamil Movie : 2024ஆம் ஆண்டின் முதல் பாதியை பொறுத்தவரை, தமிழில் பெரிதாக வெற்றி பெறும் அளவிற்கான படங்கள் வெளியாகவில்லை. அனைத்தும், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படமாகவும், குறைந்த பட்ஜெட் கொண்ட படங்களாகவும் இருந்தன. ஆனால், மலையாள திரையுலகில் வெளியான படங்கள் அனைத்தும், தென்னிந்திய அளவில் ஹிட் அடித்தன. அந்த வகையில், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்று, பிரேமலு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேமலு:


கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் வெளியான படம், பிரேமலு. இந்த படத்தில் நஸ்லேன், ‘சச்சின்’ என்ற கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மமிதா பைஜு. அதில் இவரது பெயர், ரீனு. எந்த பூசல்களும் இன்றி, ஒரு சாதாரண இளைஞனின் காதல் கதையை இயல்பாக சொல்லிய விதம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 


இப்படம், இளைஞர்களுக்கு மட்டுமன்றி, சில வயது வந்தவர்களுக்குமே பிடித்திருந்தது. படத்தின் பாடல்களும், ஹைதராபாத்தை இவர்கள் காண்பித்திருந்த விதமும் படத்திற்கு அழகு சேர்த்தன. இப்படி, படத்தின் அழகான அம்சங்களில் டாப் லிஸ்டில் இருந்தவர், மமிதாதான். இவரை பிரேமலுவில் பார்த்ததில் இருந்து தமிழக இளைஞர்கள் பலர், “இனி எண்ட் ஸ்டேட் கேரளா…” என டைலாக் பேச ஆரம்பித்து விட்டனர். தமிழக இளைஞர்கள் பலருக்கு, இவர் மீது க்ரஷ் பரவி கிடக்க, இவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


மேலும் படிக்க | பிரேமலு புகழ் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கும் முதல் தமிழ் படம்!


மமிதா நடிக்கும் தமிழ் படம்:


மமிதா பைஜு, முதன் முதலில் நடித்த தமிழ் படம், ரெபல். இந்த படத்தில் அவர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிதாக நல்ல விமர்சனங்களையோ வரவேற்பையோ பெறவில்லை என்றாலும், இது மமிதாவிற்கு கோலிவுட்டிற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பை அளித்திருந்தது. இந்த நிலையில், இவர் அடுத்து இரண்டாவதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


ஹீரோ யார் தெரியுமா? 


மமிதா, புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கனாதன் இவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும், படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 



பிரதீப் ரங்கநாதனின் படங்கள்:


‘கோமாளி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர், முதன் முதலில் ஹீரோவாக நடித்திருந்த படம் ‘லவ் டுடே’. இந்த படத்தின் கதையை இவரே எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார்.


லவ் டுடே படத்தில், “தற்போதைய காதல் இப்படித்தான் இருக்கிறது” என்பதை காட்டும் வகையில் படத்தின் கதை எழுதியிருந்தனர். ஆனால், படத்தில்  பிரச்சனைக்குரிய வகையில் நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் இருந்தன. இருப்பினும், 2k காதலர்களுக்கு இப்படம் பிடித்திருந்தது. இதில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து பிரதீப் ரங்கனாதன் எதுவும் தெரிவிக்கவில்லை. இவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான வேலைகளில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Mamitha Baiju : CSK போட்டியை கண்டுகளித்த மமிதா பைஜு! சென்னையில் வீசிய மலையாள தென்றல்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ