Thalapathy 69 Music Director : தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் விஜய், தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, அவர் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமாவை விட்டு விலகும் விஜய்:


கடந்த 30 வருட காலமாக, தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். தமிழகத்தை தாண்டி, தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழகக் வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதற்கான உறுப்பினர் சேர்க்கைக்கு புதிதாக செயலியை ஆரம்பித்திருக்கும் அவர், தற்பாேது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT (Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அவர் இரு வேடங்களில் நடிக்கிறார். 


GOAT படத்தில் நடித்து முடித்த பிறகு, தனது கடைசி மற்றும் 69வது படத்தில் நடிக்கும் விஜய், அத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். திரையுலகை விட்டு மொத்தமாக விலகி விட்டு, முழு நேர அரசியலில் இறங்கும் விஜய், 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாேட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 


தளபதி 69:


சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்னர், கடைசியாக தனது 69 படத்தில் நடிக்கும் விஜய், அதற்கான இயக்குநரை தேர்ந்தெடுக்கும பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்க இருப்பது பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் என்பது கிட்டத்தட்ட ஓகே ஆகிவிட்ட நிலையில், படத்தில் நடிப்பவர்களுக்கான கேஸ்டிங்க நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


இவர்தான் இசையமைப்பாளரா..?


தளபதி 69 படத்திற்கு ரசிகர்களால் ‘ராக் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் சேர்ந்து கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் ஒன்றாக பணிபுரிந்திருக்கின்றனர். அனிருத்தின் இசையில் நடிகர் விஜய் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்த கூட்டணி இருந்தாலே, அப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று ரசிகர்களுக்கு தெரியும். இதே கூட்டணி தளபதி 69 படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்..அங்குதான் ட்விஸ்டு!


மேலும் படிக்க | ‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?


ஐயோ இவரா..!


தளபதி 69ற்கு தமன், இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே விஜய் நடித்திருந்த ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தாளும், ஆரம்பத்தில் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். படத்தில் ஒரு சில இடங்களில் இவர் அமைத்திருக்கும் பி.ஜி.எம், விஜய்க்கு ஏற்றார் பாேல இல்லை என்றும் ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, இவர் தளபதி 69 படத்திற்கும் மியூசிக் போடுகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலர் “ஐயாே இவரா..” என்று அலறி வருகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றும் வெளியாகவில்லை. 



நாயகிகள்:


தளபதி 69 படத்தில் யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் இது குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். இவர்கள் இருவருமே இதற்கு முன்னர் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கின்றனர். சமந்தா, கத்தி மற்றும் தெறி படத்திலும், கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் படத்திலும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகள்?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ