)
Actor Vijay Upcoming Re Release Movie : தற்போது தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய், 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படம், கில்லி. 2004ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், இம்மாதத்தின் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறது.
கில்லி ரீ-ரிலீஸ்:
தெலுங்கில், மகேஷ் பாபு நடிக்க அங்கு வெளியாகி அதிரடி ஹிட் கொடுத்த படம் ‘ஒக்கடு’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூமிகா நடிக்க, வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இப்படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இதை தமிழிலும் ‘கில்லி’ என்ற பெயரில் இயக்க முடிவு செய்தனர். இதை, தரணி இயக்கியிருந்தார்.
2004ஆம் ஆண்டு வெளியான போதே கில்லி திரைப்படம் மொத்தம் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி சுமார் ரூ.50 கோடி வரை வசூலை பெற்றது. இந்த வெற்றிக்கு விஜய் ஹீரோவாக நடித்தது ஒரு காரணம் என்றாலும், படத்தின் திரைக்கதைக்காகவும் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு சென்றனர். பல முறை இப்படத்தை டிவியில் பார்த்தாலும், கில்லியின் தீரா தாகத்தால் ரீ-ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்த்து வருகின்றனர்.
வெளியாகும் இன்னொரு விஜய்யின் படம்..!
கில்லி படத்தின் ரீ-ரிலீஸை, பழைய படத்தின் ரிலீஸ் போல அல்லாமல், புதிதாக ஒரு விஜய்யின் படம் வெளியானது போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் இன்னொரு படமும் வெளியாக உள்ளதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அது என்ன படம் தெரியுமா?
ப்ளாக்-பஸ்டர் ஹிட் அடித்த விஜய்யின் படங்களுள், முக்கிய இடத்தை பிடித்த படம் ‘குஷி’. இந்த படம், 2000ஆம் ஆண்டு வெளியானது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்த இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார், எஸ்.ஜே.சூர்யா படத்தை இயக்கியிருந்தார். சுமார் 24 வருடங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தை, மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் முறை வெளியான போது சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்து தமிழகத்தில் பல கோடி வசூல் செய்த இப்படம், பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இப்படம் மீண்டும் தமிழில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் கண்டிப்பாக கில்லி படம் போலவே நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கில்லி படத்தின் வசூல்..
கில்லி திரைப்படம், இதுவரை எந்த ரீ-ரிலீஸ் படங்களும் பெற முடியாத சாதனையை பெற்றிருக்கிறது. வெளியான முதல் நாளிலேயே, இப்படம் உலகளவில் ரூ.10 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, தமிழ்நாடு-இந்தியாவை தாண்டி, இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கில்லி படத்திற்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். ரிலீஸ் ஆகி 6 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இப்படம் சுமார் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமன்றி, வேலை நாட்களில் கூட ரசிகர்கள் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்த்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ