GOAT Box Office Collection Day 1 : வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், தி கோட். விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கோட் திரைப்படம்:


தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) திரைப்படம், நடிகர் விஜய்யின் அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்திருக்கிறது. விரைவில் திரையுலகை விட்டு விலக இருக்கும் விஜய், ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக இந்த படத்தில் முற்றிலும் அவரது இளமை பருவத்தில் நடித்த படங்கள் போல நடித்திருக்கிறார். 


விஜய்யுடன் இணைந்து, தி கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சினோக-மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். லைலா, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரியாக நடித்திருக்கிறார். 50 வயதிலும் மிடுக்காக தோன்றி அனைவரையும் வியப்படைய செய்திருக்கிறார். 


முதல் நாள் கலக்ஷன்..


தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித்தின் படங்கள் ரிலீஸ் என்றாலே, முதல் நாள்-முதல் ஷோ, திருவிழா போல இருக்கும். அப்படித்தான், விஜய்யின் படமான ‘தி காேட்’ முதல் நாளும் ரசிகர்கள் மத்தியில் திருவிழா போல கொண்டாடப்பட்டது. இதுவரை வெளியான விஜய்யின் படங்களுக்கு பெரிய ஹைப் இருக்கும். காரணம், படக்குழுவினர் வெவ்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு ப்ரமோட் செய்வர். தி கோட் படத்திற்கும் அது நடந்தது. ஆனால், படக்குழுவினர் அதை மிகவும் லிமிட்டட் ஆகவே செய்தனர். 


மேலும் படிக்க | சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?



தி கோட் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று வெளியானது. இந்த நிலையில், படத்தின் முதல் நாளே உலகளவில் வெளியான தி கோட் படத்தின் மொத்த கலெக்‌ஷன் சுமார் ரூ.100 கோடியை தாண்டும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டது. அது போலவே, இப்படம் 100 கோடியை உலகளவில் கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அளவில், சுமார் 43 கோடி கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், 38.3 கோடி கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் இந்தி வர்ஷனில் 3 கோடியும், 1.7 கோடியும் கலெக்ட் செய்திருக்கிறதாம். 


லியோவை விட குறைவு:


விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனால் முதல் நாளிலேயே சுமார் 145 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்தது. இதனால், தி காேட் படம் லியோ படத்தை விட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 


படம் எப்படி? 


தி கோட் படம் வெளியாவதற்கு 3 நாட்கள் முன்பிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. காரணம், பிரேம்ஜி, வைபவ், வெங்கட் பிரபு ஆகியோர் பல்வேறு நேர்காணல்களுக்கு சென்று படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் வெளியிட்டனர். இதனால், படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.  படம், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புகளை காப்பாற்றுமா இல்லையா என்று பலருக்கு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. கடைசியில், ஓரளவிற்கு பாசிடிவான விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. 


மேலும் படிக்க | எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ