This Week Tamil Movie Releases List : 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள், எந்த பெரிய படங்களின் ரிலீஸும் இல்லாமல் தமிழ் சினிமாவே காய்ந்து கிடந்தது. ஆனால், அடுத்த 6 மாதங்கள் அதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது. தமிழில் விஜய், ரஜினி உள்ளிட்ட முண்ணனி ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளியாக, தெலுங்கிலும் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், செப்டம்பர் 27ஆம் தேதி, ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 பெரிய படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெய்யழகன்:


நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம், மெய்யழகன். கார்த்தி, அரவிந்த் சாமி முக்கிய கதாப்பாட்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது, நடிகர் கார்த்தியின் 27வது படமாகும். இந்த படத்தை, 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கியிருக்கிறார். 



குணத்தில் இரு துருவங்களாக இருக்கும் அத்தானுக்கும் மச்சினனுக்கும் இடையே நடக்கும் விஷயங்கள்தான், இந்த படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 96 படம் போல, இந்த படமும் ஒரே இரவில் நடப்பது போல காட்சிப்படுத்த பட்டிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, வரும் வெள்ளியன்று இதனை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


தேவாரா:


தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு திரைப்படம், தேவாரா பாகம் 1. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். இந்த படம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. கொரட்டலா சிவா இயக்கியிருக்கும் இந்த படம், ரசிகர்கள் எதிபார்க்கும் அடுத்த பான்-இந்திய படமாக இருக்கிறது.



தேவாரா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள், படம் பலவித ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பியதாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். இந்த படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ வெளிநாட்டில் திரையிடப்பட இருக்கிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.


பேட்ட ராப்:


பிரபு தேவாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம், பேட்ட ராப். இதனை எஸ்.ஜே.சீனு இயக்கியிருக்கிறார். பாலா என்ற கதாநாயகனின் காதல் பயணத்தை கூறும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், ஜானகி எனும் கதாப்பாத்திரத்தில் வேதிகா நடிக்கிறார். 



நடனம், இயக்கம், நடிப்பு என அனைத்திலும் கலக்கும் பிரபு தேவா, இதிலும் தனது பன்முக தன்மையை காட்டியிருக்கிறார். 


ஹிட்லர்:


விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ஹிட்லர். இந்த படத்தை தனா எழுதி இயக்கி இருக்கிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். 



இந்த படத்தை, வரும் 27ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பார்க்கலாம்.


மேலும் படிக்க | கடைசி உலகப்போர் vs லப்பர் பந்து: எந்த படம் பெஸ்ட்? எதை முதலில் பார்க்கலாம்?


சட்டம் என் கையில்:


நகைச்சுவை நடிகர் சதீஷ், ஹீரோவாக நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். இந்த படத்தில் வித்யா பிரதீப், அஜய் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சாச்சி இயக்கியிருக்கிறார்.



கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் வெற்றிக்கு பிறகு, புதிவிதமாக, க்ரைம் ஸ்டோரி கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்,சதீஷ். இந்த படத்தையும் வரும் 27ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பார்க்கலாம். 


தில் ராஜா:


ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வரும் 27ஆம் தேதி வெளியாகும் படம், தில் ராஜா. இந்த படத்தில் விஜய் சத்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 


எதை முதலில் பார்க்கலாம்? 


மேற்கூறிய அனைத்து படங்களின் மீதுமே, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதில், பார்வையாளர்கள் எந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அதை முதலில் பார்க்கலாம். 


மேலும் படிக்க | OTT Release : ஓடிடியில் இன்று ரிலீஸாகும் புதுப்புது படங்கள்! எந்த தளத்த்தில், எதை பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ