Vettaiyan Trailer : வேட்டையன் டிரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
Vettaiyan Trailer Release : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன?
Vettaiyan Trailer Release : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
டிரைலர்:
நடிகர் ரஜினி, காவல் அதிகாரியாகவும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஆகவும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
வேட்டையன் திரைப்படம்:
பத்திரிக்கையாளராக இருந்து, பின்பு திரைப்பட இயக்குநராக மாறியவர் டி.ஜே.ஞானவேல். ஜெய்பீம் படத்தை அடுத்து, ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கியிருக்கும் வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு முதலில், நடிகர் பிரகாஷ் ராஜ் வாய்ஸ் டப்பிங் கொடுத்தார். இது டீசருக்கு பிறகு நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால், AI மூலம் அமிதாப் பச்சனே தமிழ் பேசுவது போல வாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இவர் மட்டுமன்றி ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களின் கதாப்பாத்திரங்களின் அறிமுக பாேஸ்டர்களும் ஒவ்வொன்றாக சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
டிரைலர் வருவதில் தாமதம்:
வேட்டையன் படத்தின் டிரைலர், சரியாக 5 மணிக்கு வெளியாகும் என கூறிய லைகா நிறுவனம், அதற்கென்று தனியாக கவுண்ட்-டவுன் எல்லாம் வேறு போட்டு பதிவுகளை வெளியிட்டது. ஆனால், சொன்ன நேரத்தை தாண்டி மிகவும் தாமதமாகத்தான் டிரைலர் வெளியானது. இதனால், ரஜினி ரசிகர்கள் மிகவும் டென்ஷனாகி விட்டனர். இதையடுத்து, 2:39 என்ற எண்களை லைகா வெளியிட்டது. 2 நிமிடங்கள் 39 வினாடிகள் அந்த டிரைலர் இருப்பதாக லைகா குறிப்பிட்டதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். இருந்தாலும் டிரைலர் வரும் வரை, அந்த நிறுவனத்தை அவர்கள் திட்டிக்கொண்டே இருந்தனர்.
டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன் என்ன?
ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு, தன் தலைவரை ஸ்கிரீனில் பார்ப்பதே பெரிய கொண்டாட்டம்தான். அதிலும், ரஜினிக்கு பல்வேறு ஃப்ரேம்களில் மாஸான காட்சிகள் வைத்திருக்கின்றனர். இது, ரசிகர்களை கவர்ந்திருக்கிறது பின்னணி இசையில் வழக்கம் போல, அனிருத் கலக்கியிருக்கிறார்.
ஒரு சிலர், ரஜினிக்கு 74 வயது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள், அவ்வளவு எனர்ஜியுடன் நடித்திருக்கின்றார் என்று கூறி வருகின்றனர். அது மட்டுமன்றி, ரஜினிக்கு பல ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு காட்சியில் ரஜினி நடு விரலை காண்பிப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது. படம், கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைலரில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, அபிராமி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட அனைவருமே இடம் பெற்றிருக்கின்றனர்.
ரிலீஸ் எப்போது?
வேட்டையன் திரைப்படம், வரும் 10ஆம் தேதி, தொடர் விடுமுறை தினத்தையடுத்து வெளியாக இருக்கிறது. வழக்கமாக, ரஜினியின் படங்கள் தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளை குறிவைத்து வெளியாகும். அந்த வகையில், விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகளை வைத்து இப்படம் வெளியாகியிருக்கிறது.