ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இந்த படத்தை வெளியிடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது. 


அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. 


மேலும் படிக்க | Ajith Kumar Trisha Son In Good Bad Ugly Movie :  குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?


முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தி கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வெளியிடுகிறது. 


ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது. அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை தி கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 


ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவாரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.


உலகம் முழுவதும் நாளை தி கோட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனிடையே இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சினிமாவை விட்டு விலகி, முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய்க்கு, தி கோட் (The Goat) திரைப்படம் கடைசி சில படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடித்திருக்கின்றனர். லைலா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பலரும் எதிர்பாராத சர்ப்ரைஸ்கள் பல காத்துக்கொண்டுள்ளன. அவற்றை படக்குழுவினர் வரிசையாக கூறினாலும், தியேட்டரில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Latest News Bigg Boss 8 Tamil Contestant : பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ