Who Is Ramya Pandian Husband Lovel Dhawan : தமிழ் திரையுலக பிரபலங்களின் திருமணம், அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை பிடித்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்வான நாளாக இருக்கிறது. இந்த திருமணங்களை ஊடகங்கள் பெரிதாக கவர் செய்வதால், சில நாட்களுக்கு ஊரே இதைப்பற்றித்தான் பேசும். அந்த வகையில், சமீபத்தில் திருமணம் முடித்த நடிகை ரம்யா பாண்டியன் பாண்டியனின் திருமணம் குறித்துதான் இங்கு பார்க்கப்போகிறோம். 


ரம்யா பாண்டியன்:

 

ரம்யா பாண்டியனை அனைவரும் முதன் முதலில் பார்த்தது, 2016ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தில்தான். முன்னாள் தமிழ் திரைப்பட இயக்குநர் துரை பாண்டியனின் செல்ல மகளான இவர், தன் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றார்.

 

தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன் இவரது சித்தப்பா. கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் முடித்த கீர்த்தி பாண்டியன், இவரது தங்கை முறை உறவினராவார். ரம்யா பாண்டியனை ரசிகர்களிடம் மிகப்பிரபலமாக்கியது இரண்டு சின்னத்திரை நிகழ்ச்சிகள். ஒன்று, குக் வித் கோமாளி. இன்னொன்று, பிக்பாஸ் நிகழ்ச்சி. 

 

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம்!

 

நடிகை ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்கு பிறகு ஆண் தேவதை படத்திலும் நடித்தார். ஆனால் இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக இருந்தார். இதில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் இவரை ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்த மக்கள், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்பு அப்படியே நெகடிவ் விமர்சன மழையை பொழிந்தனர். இருப்பினும், இந்த சீசனில் அவர் 3வது ரன்னர் அப் பட்டத்தை வாங்கினார். 

 

ரம்யா பாண்டியன் திருமணம்…

 

நடிகை ரம்யா பாண்டியன், சில வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபரை, சமூக வலைதள பக்கங்களின் மூலம் அறிவித்தார். இது, அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. சமீபத்தில் ரிஷிகேஷில் கங்கை நதியோரம்  இவர்களுடைய திருமணம் நடைப்பெற்றது.  ரம்யா பாண்டியன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


 

யார் மாப்பிள்ளை? 

 

ரம்யா பாண்டியன் கரம் பிடித்துள்ளவரின் பெயர், லோவல் தவான். ரிஷிக்கேஷை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ஒரு யோகா மையத்தில் யோகா பயிற்சியாளராக பணிபுரிந்திருக்கிறார். இங்கு, யோகா கற்றுக்கொள்வதற்காக சென்ற ரம்யா பாண்டியனுக்கும், லோவலுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறி பின்பு காதலாக மாறியிருக்கிறது. இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், தற்போது இருவரும் மகிழ்ச்சியாக திருமணம் முடித்துள்ளனர். இந்த திருமணம் தமிழ் முறைப்படி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

லோவல், இந்திய அளவில் பிரபலமான யோகா பயிற்சியாளராக இருக்கிறார். Art Of Living என்ற மையத்தை நடத்தி வரும் இவர், லைஃப் கோச் ஆகவும் இருக்கிறார். இந்திய குரு மற்றும் ஆன்மீக தலைவர்ஸ்ரீ ஸ்ரீ குருதேவ் ரவிசங்கரின் நெருங்கிய வட்டாரங்களுள் இருக்கும் நபர்களுள், லோவலும் ஒருவர். நவராத்ரி உள்பட சில சமயங்களில் இந்தியா முழுவதும் சென்று பல்வேறு இடங்களில யோகா மற்றும் தியான பயிற்சியை லாேவல் கொடுத்து வருகிறார். இதை கேள்வி பட்டவர்கள், “ஓ இவர் இந்த வேலையெல்லாம் செய்தவரா..” என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

 

திரையுலகில் ஆக்டிவாக இல்லை..

 

நடிகை ரம்யா பாண்டியன், சினிமாவிற்கு வந்ததில் இருந்து இப்போது வரை, பெரிதாக ஆக்டிவாக இல்லை. ஆனால், சமூக வலைதள பக்கங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர், ஒரு முறை இடுப்பு தெரியுமாறு புடவைக்கட்டி வெளியிட்ட புகைப்படங்கள் படு வைரலானது. இதையடுத்து கடந்த ஆண்டு வரை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த அவர், சுமார் 1 வருடமாக திரையுலகில் தலைக்காட்டாமல் இருக்கிறார். 

 


 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ