Who Is Tarini Kalingarayar? மலையாள நடிகராக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வருகிறார், ஜெயராம். இவரது மகன், காளிதாசும் வெற்றிப்படங்களை கொடுத்த நடிகராக இருக்கிறார்.  இவருக்கும் தாரிணி என்பவருக்கும் சமிபத்தில் திருமணம் நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காளிதாஸ் ஜெயராம் திருமணம்:


தமிழில் இருக்கும் இளம்-துரு துரு நடிகர்களுள் ஒருவர், காளிதாஸ் ஜெயராம். 30 வயதாகும் இவருக்கும், தாரிணி காலிங்கராயர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது காதல் திருமணம் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி, காளிதாஸ்-தாரிணி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதையடுத்து, சரியாக ஓராண்டு இடைவேளையில் தற்போது இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. 


காளிதாஸ் ஜெயராம், கேரளாவை சேர்ந்தவர். அவருக்கு மனைவியாகியிருக்கும் தாரிணி, தமிழ்நாட்டை சேர்ந்தவர். இருவருக்கும், டிசம்பர் 8ஆம் தேதியான நேற்று, குருவாயூர் கோவிலில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. இந்த புது திருமண ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தற்போது தெரிவித்து வருகின்றனர். 


யார் இந்த தாரிணி? 


தாரிணியின் முழு பெயர், தாரிணி காலிங்கராயர். இவர், தனது பள்ளி-கல்லூரி படிப்புகளை சென்னையில் முடித்தார். இவரது சொந்த ஊர், நீலகிரி. இவர், குடும்பமாக சிறுவயதிலேயே சென்னையில் செட்டில் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. 


தாரிணியின் தாத்தா, இந்திய விமானப்படை ராணுவ அதிகாரியாக இருந்திருக்கிறார். அதே போல, நாடாளுமன்றத்தின் முன்னாள் சபா உறுபினராகவும் இருந்திருக்கிறார். இவரும், காளிதாஸும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காெண்ட போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 


16 வயதிலேயே மாடல்!


சிறுவயதில் இருந்தே, மாடலிங் துறையில் வளர வேண்டும் என்று ஆசை கொண்ட தாரிணி, 16 வயதிலேயே மாடலாக மாறி, சில மேடைகளை ஏறினாராம். இதையடுத்து இவருக்கு மாடலாக இருக்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இவரும் இவரது குடும்பத்தினரும் நடிகர் ஜெயராம் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள் என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டின் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவராக இருக்கிறார், தாரிணி. அதே போல, 2021ஆம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ்  போட்டியில் இவர் 3வது ரன்னர் அப் அப்பட்டத்தை பெற்றவராக இருக்கிறார். 


மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷின் காதலன் இப்படிப்பட்ட ஆளா? முழு விவரத்தை இங்கே தெரிஞ்சிக்கோங்க..


காளிதாஸ் ஜெயராமும், தாரிணியும் சேர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிராண்ட்களுக்கு ஒன்றாக வீடியோ செய்து, கெலாப் செய்திருக்கின்றனர். தாரிணி, தனியாக பல பிராண்ட்களுக்கும் அவர் பிராண்டாக இருக்கிறார். காளிதாஸ் மட்டுமன்றி, அவரது சகோதரி மாளவிகா ஜெயராமிற்கும் இவர் மிகவும் நெருங்கிய தோழியாக இருக்கிறார். 



காளிதாஸ் ஜெயராம் நடித்த படங்கள்:


காளிதாஸ் ஜெயராம், 7 வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்தவர். அதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இவர் தமிழில் முதலில் நடித்த படம், மீன் குழம்பும் மண் பானையும். இதையடுத்து இவருக்கு பெரிய பெயரை தேடிக்கொடுத்தது, பாவக்கதைகள் படத்தின் ‘தங்கம்’ படம்தான். அதில் இவர் சத்தார் என்ற பாத்திரத்தில் திருநங்கையாக நடித்திருப்பார். சமீபத்தில் இவர் நடித்த ராயன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.  தற்போது திருமணம் முடித்திருக்கும் இவர், கையுடன் தனது மனைவியோடு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | காளிதாஸ் ஜெயராமின் திருமண புகைப்படங்கள்!! ஜோடி பொருத்தம் சூப்பர்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ