Who Is Antony Thattil? Boyfriend Of Actress Keerthy Suresh : தமிழ் திரையுலகில், வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர், கீர்த்தி சுரேஷ். 32 வயதாகும் இவருக்கு, விரைவில் திருமணம் ஆக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்:
முன்னாள் நடிகை மேனகாவின் செல்ல மகள், கீர்த்தி சுரேஷ். நடிகரும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமாரை மேனகா கரம் பிடித்த பிறகு, கேரளாவில் இவர்கள் செட்டிலாகி விட்டனர். கேரளாவில் படித்து வளர்ந்த கீர்த்தி, 2000 ஆண்டிற்கு பின்பு சில படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக வந்த இவர், சென்னையில் ஃபேஷன் டிசைனிங் பயின்றார். இவரை ஹீரோயினாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம், ‘இது என்ன மாயம்’. இந்த படத்தில், அமைதியான பெண்ணாக நடித்து மக்களின் மனம் கவர்ந்த கீர்த்தி, தாெடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
சிவகார்த்திகேயனுடன் ரெமோ மற்றும் ரஜினி முருகன் படங்களில் நடித்து, புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர், விஜய்யுடன் பைரவா, ரஜினியுடன் அன்னாத்த ஆகிய படங்களில் நடித்தார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த இவருக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த கீரத்தி, சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் தடம் பதித்தார். தெறி படத்தின் இந்தி ரீ-மேக் ஆன ‘பேபி ஜான்’ படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
காதலும் திருமணமும்:
பொதுவாக, எந்த நடிகைகள் சிங்கிளாக இருந்தாலும், அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாக திடீர்-திடீரென வதந்திகள் பரவும். அப்படி, கீர்த்தி சுரேஷ் குறித்த செய்திகளும் அவ்வப்போது இணையத்தில் வலம் வரும். ஆனால், இப்போது வெளிவந்துள்ளது வதந்தி அல்ல, உண்மை தகவல்தான் என கூறப்படுகிறது. கீர்த்தி, ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறாராம். இவர்கள், சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருப்பதாகவும், சமீபத்தில் காதலர்களாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரம்யா பாண்டியனை மணம் முடித்த லோவல் இப்படிப்பட்ட ஆளா? தெரிஞ்சிக்காேங்க!
யார் இந்த ஆண்டனி தட்டில்?
ஆண்டனி தட்டில், கீர்த்தியை போலவே கேரளாவை சேர்ந்தவர். கொச்சின் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பொறியியல் பட்டதாரியான இவர், சில ஆண்டுகளுக்குமுன்பு கத்தாரில் வேலை செய்ததாகவும், அதன் பிறகு கொச்சினுக்கு திரும்பி நவீன திரைச்சீலைகளை தயாரிக்கும் தொழிலில் முன்னோடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவரது நிறுவனத்தின் பெயர், Asperos Window Solutions. இந்த நிறுவனம் மட்டுமன்றி, இன்னும் சில லாபம் பார்க்கும் நிறுவனத்தில் முதன்மை உரிமையாளராகவும் இருக்கிறாராம். கொச்சினில் இவர் பெயரில் சில ரெசாஃர்ட்கள் உள்ள நிலையில், சென்னை, துபாய், கொச்சின் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது இவரது வழக்கமாம்.
காதல் எப்படி?
இணையத்தில் வைரலாகி வரும் சில செய்திகளின் படி, கீர்த்தியும் அண்டனியும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்திருக்கின்றனர். சமீபத்தில்தான், இருவரும் தங்களது காதலை தெரிவித்து கொண்டனராம். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்று விட்டதாகவும், டிசம்பரில் திருமணத்தை முடித்து வைக்க இரு வீட்டாரின் குடும்பத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ