Young Music Director Replaces AR Rahman In Suriya 45 : சூர்யாவின் 45வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இதில், ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேக் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்:


அனைத்து வருடமும் பலரது ஸ்பாடிஃபை ப்ளே லிஸ்டில் டாப்பில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வருடமும் அதே நிலையில் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இவரது விவாகரத்து குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது கேரக்டரை டார்கெட் செய்து யூடியூப் சேனல்கள் பல, அவதூறு பரப்ப ஆரம்பித்தன. இதனால் அவர் உள்பட அவர் குடும்பத்தில் இருந்த அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைத்துறையில் இருந்து 1 வருடத்திற்கு பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் கமிட் ஆகியிருக்கும் படம், சூர்யா 45. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இப்போது ரஹ்மான் பிரேக் எடுத்திருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். 


யார் அவர்?



அந்த இசையமைப்பாளருக்கு 20 வயதுதான் ஆகிறது. இவர் பெயர், சாய் அபியாங்கர். இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஆச கூட’ பாடல் மூலம் பிரபலமானவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இவரை படக்குழு நியமித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவர் சரியான வேலையை செய்வார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் கையில் வைத்திருக்கின்றனர். 


யார் இந்த சாய்?


தமிழில் இருக்கும் Independent இசையமைப்பாளர்களுள் ஒருவர், சாய் அபியாங்கர். இவர், இதற்கு முன்னர் சில ஆல்பம் பாடல்களுக்கும், தனியாக பாடல் எழுதியும் அதற்கு இசையமைத்து அவற்றை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் Benz படத்தில் இசையமைப்பாளராக இணைந்தார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு சூர்யா 45 படமும் கைக்கு வந்துள்ளது. இவரது கட்சி சேரா மற்றும் ஆச கூட பாடல் பல மில்லியன் வியூஸ்களை கடந்து இணையத்தில் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது. 


சூர்யாவின் படங்களுக்கு தொடரும் பிரச்சனை!


நடிகர் சூர்யா நடித்த படங்கள் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறது. கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் விமர்சனத்திலும் வசூலிலும் சறுக்கியது. இதையடுத்து அவர் கமிட் ஆன படங்கள் அனைத்துமே, அவர் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்தவை. இதையடுத்து, அவர் நடித்த கங்குவா படம் சமீபத்தில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இப்போது சூர்யா 45 படத்தில் இருந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருக்கிறார். இப்படி இவர் படங்கள் மட்டும் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 


மேலும் படிக்க | Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?


மேலும் படிக்க | சூர்யா 45 படத்தின் நாயகி யார்? சூர்யாவுடன் ஏற்கனவே ஜோடி போட்டவர்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ