Latest OTT Releases This Week : கடந்த சில வாருடங்களாகவே, தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் பல சில நாட்களுக்குள்ளாகவே ஓடிடியில் வெளிவந்து விடுகின்றன. புதுப்புது படங்கள் மட்டுமன்றி, பல வெப் தொடர்களும் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன அப்படி வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமரன்: 


சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம், அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம், பல்வேறு 2 ஆண்டு வேலைகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 



சுமார் 300 கோடி வரை இந்த படம் உலக அளவில் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அமரன் திரைப்படம் netflix தளத்தில் 5ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. 


மட்கா:


தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் வருன் தேஜ். சமீபத்தில் இவரது மட்கா திரைப்படம் வெளியானது. ஆல் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கருணா குமார் இயக்கியிருக்கும் இந்த படம் பர்மாவில் இருந்து அகதியாக விசாகப்பட்டினத்திற்கு வரும் ஒருவன் எப்படி தனது திறமையால் சூதாட்ட தானாக மாறினான் என்பதை விளக்குகிறது. இந்த படத்தை டிசம்பர் 5 முதல் அமேசான் பிரைம் தளத்தை பார்க்கலாம். 



பிளாக் டவ்ஸ்:


வொண்டர் வுமன் படம் மூலம் பிரபலமான Keira Knightley நடித்திருக்கும் தொடர் பிளாக் டவ்ஸ். லண்டன் நகரின் பாதாள உலகை காட்டும் தொடராக இருக்கிறது இது. திரில்லர் அம்சங்கள் நிறைந்த இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த தொடரை Netflix தளத்தில் நாளை முதல் காணலாம்.



அக்னி: 


ஒரு நகரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீ பறவ தொடங்குகிறது. நகர மக்களே காப்பாற்றுவதற்காக தீயணைப்பு வீரர்கள் செய்யும் சாகசங்களை கதையாக கூறுகிறது அக்னி திரைப்படம். இந்த படத்தில் சயாமி கெர், பேட்ரிக் காந்தி, ஜிதேந்திர ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருக்கின்றனர். இந்த ஆக்சன் டிராமா படத்தை டிசம்பர் ஆறாம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். 



மேலும் படிக்க | கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? இந்த தளத்தில் தான் வெளியாகிறது!


Maeri: 


Maeri தொடர், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை வட்டம் போட்டு காண்பிக்கும் தொடராக உருவாகி இருக்கிறது. இந்த தொடரில் பூஷன் பட்டேல், அங்கிதா லாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் பார்க்கலாம்.



மேரி: 


பழங்காலத்தில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது, மேரி தொடர். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதால், சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறாள், நாயகி.



தன்னை ஒதுக்கியவர்களை ஆள வேண்டும் என்ற அவளது வெறி, அவளை பெரிய இடத்திற்கு கொண்டு செல்கிறது. இதை வைத்து உருவாக்கியிருப்பதுதான், மேரி தொடர். இதனை டிசம்பர் 6ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். 


மேலும் படிக்க | இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ