Sivakarthikeyan Sudha Kongara Issue: விஜய் நடிப்பில் வெளியான The Goat திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை ஒப்படைத்தாரோ அப்போது இருந்து அவர் மீது இருந்து எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. கோலிவுட்டில் முக்கியமான நடிகராக சிவகார்த்திகேயன் எப்போதோ உயர்ந்துவிட்டாலும் இப்போது விஜய்யின் வெற்றிடத்தை நிரப்பும் அளவுக்கு உயர்ந்துவிட்டதுதான் பலரின் எதிர்பார்ப்புக்கும் காரணம்.
அதே வேளையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூலையும் குவித்த அமரன் திரைப்படம், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அடுத்தடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்பதையும் கவனிக்க வைத்திருக்கிறது. இனியும் பிரின்ஸ், மிஸ்டர் லோக்கல் பாணியில் படங்களை நடிப்பதை தவிர்த்து கதையம்சம் நிறைந்த நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புறநானூறு படத்தின் லுக் டெஸ்ட்
தற்போது சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கும் புறநானூறு (Purananuru) என பெயரிப்பட்டுள்ளதாக கூறப்படும் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்புக்காக சமீபத்தில் லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகுமா? இன்னும் 7 நாள் படப்பிடிப்பு பேலன்ஸ்!
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் இணையும் புறநானூறு படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் உள்பட இந்த நால்வரையும் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லுக் டெஸ்ட் எடுப்பதற்கு அனைவரும் வந்த நிலையில், சிவகார்த்திகேயன் அங்கு வந்துள்ளார்.
SK - சுதா கொங்கரா கருத்து வேறுபாடு?
அப்போது சிவகார்த்திகேயன் அதிகமாக தாடி வைத்திருந்ததாகவும், அதனை குறைத்துக்கொண்டு வரும்படியும் சுதா கொங்கரா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சுதா கொங்கராவின் மீது சிவகார்த்திகேயன் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி இருப்பதுபோல் இருந்தாலே போதும் என சொன்னதால் சிவகார்த்திகேயன் தாடியை எடுக்காமல் வந்ததாகவும், திடீரென சொல்வதால் தற்போது தாடியை எடுக்க இயலாது என கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்ததாக கூறப்படும் சுதா கொங்கரா, படப்பிடிப்பில் இருந்தவர்களை காரணமே இன்றி திட்டித் தீர்த்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதில் அவர் சிவகார்த்திகேயன் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. சுதா கொங்கராவின் செயலால் ஆத்திரமடைந்ததாக கூறப்படும் சிவகார்த்திகேயன், யாரிடமும் சொல்லாமல் அதாவது யாருக்குமே தெரியாமல் படப்பிடிப்பு தலத்தில் இருந்து கிளம்பிவிட்டதாகவும், நீண்டநேரம் கழித்தே படக்குழுவினர் அவர் அங்கு இல்லாததை உணர்ந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
சமாதானம் ஆவாரா SK?
அதன்பின், சுதா கொங்கரா தரப்பில் சிவகார்த்திகேயனை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும், அவர் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஆகாஷ் தரப்பு சிவகார்த்திகேயனிடம் சமாதானம் பேசி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சிவகார்த்திகேயன் இல்லாமல் மற்ற மூவரையும் வைத்து லுக் டெஸ்ட்டை முடித்தாலும், சிவகார்த்திகேயனை புகைப்படம் எடுத்தால்தான் அடுத்த கட்ட அறிவிப்பையே செய்யும் முடியும் என சூழல் உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கும் இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன், சுதா கொங்கரா போன்ற கதையம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்குநருடனும் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்தது கோலிவுட்டில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவலும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளரின் ட்வீட்
பருத்திவீரன் மாதிரி தாடி வச்சா எப்படி லுக் டெஸ்ட் எடுப்பது என சுதா கொங்கரா கடுப்பேற்றியதாகவும், அதனால்தான் சிவகார்த்திகேயன் கோபமடைந்து அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், புறநானூறு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் தற்போது அவரது X பக்கத்தில், பருத்திவீரன் படத்தின் காட்சியை ஒன்று பகிர்ந்துள்ளார். அதாவது, கிசுகிசு பரப்புபவர்களின் தலையில் கொட்டு வைப்பதை போல் ஆகாஷ் பாஸ்கரன் இதை பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
— Aakash baskaran (@AakashBaskaran) December 3, 2024
மேலும் படிக்க | 'நடிகர் விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்...' - நடிகை சினேகா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ