Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் கேமியோ ரோலில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் எந்த நடிகர் எந்த ரோலில் நடிக்க உள்ளார் என்கிற தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா திரைப்படம்:


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படம் 10 இந்திய மொழிகளில் 3டியில் வெளியாகிறது. அதுமட்டுமின்றி 'கங்குவா' திரைப்படம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு இடையே நடக்கும் கதை போல் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகும் படம் கங்குவா. இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


மேலும் படிக்க | இந்தியன் 2 படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இதோ


இந்த படத்தில் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, தீபா வெங்கட், ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் முன்பே வெளியிட்டனர். அதில் சூர்யா இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் காணப்பட்டார். மேலும் இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இரண்டு பாகங்களில் வெளியாகவிருக்கும் கங்குவா: 


இதனிடையே கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும், இதில் முதல் பாகம் கட்டாயம் மெகா ஹிட்டாகும் என்றும் கூறப்படுகிறது. 


கங்குவாவில் தம்பி கார்த்தி: 


இந்நிலையில் தற்போது கங்குவா படம் பற்றிய சுவாராசமான புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளாராம். சில நிமிடங்கள் அவர் வரும் காட்சிகளை ரிலீஸ்வரை வெளியே சொல்லாமல் சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. படம் ரிலீஸானப் பிறகு தெரிய வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


நாளை முதல் பாடல் ரிலீஸ்:
இதற்கிடையில் நாளை சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிடவுள்ளனர். இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.



மேலும் படிக்க | அடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ