அடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக உள்ள பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

 

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல படங்கள் வெளியாகி வருகிறது. இதில் ஒரு சில படங்கள் சிறிய பட்ஜெட் படமாக இருக்கும், அதே சமயம் சில படங்கள் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களின் பட்டியலை இங்கே காணலாம்.

1 /7

தனுஷுன் 50வது படம் ராயன், இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.  

2 /7

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இதில் பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

3 /7

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இந்த படத்தில், பசுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.  

4 /7

சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள முதல் படம் கங்குவா. இதில் நடிகர் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.  

5 /7

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட். இதில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படம் வெளியாகியுள்ளது.  

6 /7

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.  

7 /7

இந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் அந்தகன் ஆகும். இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக உள்ளது.