புது முல்லை வந்தாச்சு: பாண்டியன் ஸ்டோர்ஸ் ராசிக்காரர்கள் ஹேப்பி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவ்யா அறிவுமணி விலகியதை தொடர்ந்து லாவண்யா புதிய முல்லையாக நடிக்க இன்று முதல் துவங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் அண்ணன் தம்பிகள் தற்போது பண பிரச்சனை காரணமாக கதிர், முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் திடீரென ற்கொலை செய்து கொண்டதால், அவர் நடித்த முல்லை கேரக்டரில் காவ்யா அறிவுமணி மாற்றப்பட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸில் இவரின் நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது இவருக்கு வெள்ளித்திரையிலிருந்து பட வாய்ப்புகள் வருவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தான் விலகவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் செய்திகள் வெளியானது.
மேலும் படிக்க | ஜி.பி. முத்து செம ஸ்மார்ட் - வனிதா புகழாரம்
இதனையடுத்து காவ்யா அறிவுமணியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதை தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதி செய்தார். மேலும் தற்போது இவருக்கு பதில் புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு பதிலாக சிப்பிக்குள் முத்து லாவண்யா கமிட் ஆகி இருக்கிறார். சிப்பிக்குள் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் லாவண்யா. இவர் திருப்பூரை சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து சிற்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் புதிய முல்லையாக என்ட்ரி கொடுத்து இருக்கும் லாவண்யாவிற்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் சித்ரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சித்ராவிற்கு டப்பிங் கொடுக்கப்பட்ட அதே குரல் தற்போது லாவண்யாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சித்ராவிற்கு டப்பிங் கொடுத்த அதே குரலை புதிய முல்லைக்கு கொடுத்து இருப்பதால் சித்ராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமிழ் தொலைக்காட்சி ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு; நவம்பர் முதல் டிவி இல் Blacksheep
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ