மற்றொரு பிரச்சையில் சிக்கியது தீபிகாவின் சபாக் படம்!
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் சபாக் படத்திற்கு தடை கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் சபாக் படத்திற்கு தடை கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக போர்கொடிகள் தற்போது எழுந்துள்ளது.
2005-ஆம் ஆண்டில், டெல்லியின் உயர்மட்ட கான் சந்தையில் நதீம் கான் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் லக்ஷ்மி என்பவரை ஆசிட் வீசி தாக்கினர். இந்த சம்பவத்தில் லக்ஷ்மி உயிருக்கு சிதைக்கப்பட்டார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தற்போது சபாக் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்க்க கூடாது எனவும், JNU மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த திபிகா படுகோனுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் எனவும் நேற்று துவங்கி சமூக ஊடக போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் அடுத்தக்கட்ட நகர்வாக தீபிகா படுகோனின் திரைப்படத்தில் இந்து சமூகத்தின் பெயர் வில்லனாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், படத்தினை புறக்கணிக்க வேண்டும் எனவும் சமூக ஊடக போராளிகள் தங்கள் போராட்டத்தை முன்னேற்றினர்.
உண்மை கதையில் லக்ஷ்மி அகர்வாலின் மீது ஆசிட் வீசியது நதீம் கான் என்னும் இஸ்லாமியர். ஆனால் இந்த திரைப்படத்தில் நதீம் கான் என்னும் இஸ்லாமியர் பெயருக்கு பதிலாக ராஜேஷ் என்னும் இந்து நபரின் பெயரை பயன்படுத்தி உள்ளனர் என்பது போராட்டக்காரர்களின் கூற்று. மேலும் இந்த தவறான கருத்து மற்றுமொரு மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை குறித்து மற்றொரு சர்ச்சை வெளியாகியுள்ளது, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் அபர்னா பட் சபாக் படத்திற்கு தடை கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில் லக்ஷ்மியின் கதையை வைத்து படத்தை எடுத்துவிட்டு, அவருக்கான கிரெடிட் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.