லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்திருக்கும் படம் லியோ. இதற்கு முன்னர், இவர்களின் கூட்டணி ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்தது. லியோ திரைப்பத்திற்காக தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களுமே காத்துக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக படம், இரு தினங்களுக்கு முன்பு (அக்டோபர் 19) வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயாரிப்பாளர் லலித்குமார்:


லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வழங்கியது. லியோ படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர், லலித் குமார். லியோ படத்தின் பல அப்டேட்டுகளையும் அப்படம் குறித்த பல தகவல்கள் வெளியில் தெரிய காரணமாகவும் இருந்தவர், லலித்குமார். இவர், மாஸ்டர் படத்தையும் தயாரித்து வழங்கியிருந்தார். 


“விஜய்க்கு பரிசு கொடுக்க நினைத்தேன்..”


தயாரிப்பாளர் லலித்குமார் லியாே படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, மாஸ்டர் திரைப்படம் வெளியான போது விஜய்யுடன் ஏற்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைந்த போது விஜய்யிடம் “உங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க நினைக்கிறேன்..” என்று தான் கூறியதாகவும் அதற்கு விஜய், “அதெல்லாம் எதுக்கு? எனக்கு நீங்கள் சம்பளம் கொடுத்து விட்டீர்கள். அதுவே போதும்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள், “இருந்தாலும் இந்த பரிசெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 


விஜய்க்கு கார் என்றால் பிரியம்..! 


விஜய்யை நடிகர் என்பதை தாண்டி, அரசியல் மீது நாட்டம் கொண்டவராகவும் மக்கள் நலப்பணி செய்பராகவும் பலருக்கு தெரியும். ஆனால், அவருக்கு பிடித்த விஷயங்கள் குறித்து பலருக்கு தெரியாது. நடிகர் விஜய்க்கு கார் மீது தனி மோகம் உள்ளது. இவர், லேண்ட் ரோவர், ஆடி, பி.எம்.டபுள்.யூ, முஸ்டாங் பென்ஸ் உள்ளிட்ட கார்களை கலெக்‌ஷனாக வைத்துள்ளார். கார் மீது இவ்வளவு மோகம் இருந்தும், தயாரிப்பாளர் பரிசாக கார் கொடுக்க முற்பட்டபோது விஜய் அந்த பரிசை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி இவருக்கு ஹாலிவுட் நடிகரான டேன்ஸல் வாஷிங்டனை மிகவும் பிடிக்கும். இந்த விஷயமும் சில நாட்களுக்கு முன்னர் ‘தளபதி 68’ படத்தின் வேலைகள் ஆரம்பித்தவுடன்தான் தெரிய வந்தது. 


மேலும் படிக்க | Leo Box Office Day 1: முதல் நாளே ஜெய்லர் வசூலை மிஞ்சிய லியோ! எத்தனை கோடி தெரியுமா?


லியோ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு..


ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்திற்கு முதல் நாளில் அதிகளவில் வரவேற்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஹைப்பை கிளப்பி கொண்டிருக்க, லோகேஷ் கனகராஜ்ஜின் படம் என்பதால் இன்னொரு பக்கம் அதீத எதிர்பார்க்கு கிளம்பியது. அது மட்டுமன்றி, இப்படம் எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்தது. இதனாலும் இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி பலர் காத்துக்கொண்டிருந்தனர். 


ஒரு சில ரசிகர்கள் லியோ படத்தின் ஒளிப்பதிவையும், விஜய்யின் நடிப்பையும் பெருமையாக பேச, ஒரு சிலர் திரைக்கதையில் உள்ள ஓட்டை உடைசல்கள் குறித்து குறை கூறி வருகின்றனர். படத்தின் முதல் பாதியில் உள்ள வேகம், இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை என்றும் சிலர் தங்களது விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர். சில தேவையற்ற காட்சிகளால் “நல்ல படம்” என்று லியோ படத்தை கூற முடியவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். 


முதல் நாள் கலெக்ஷன்


லியோ திரைப்படம், இதுவரை 148 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ட் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஜெயிலர் மற்றும் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை லியாே படம் மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் உள்ள பெரிய குறை இதுதான்-ரசிகர்கள் கருத்து..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ