Leo Box Office Day 1: முதல் நாளே ஜெய்லர் வசூலை மிஞ்சிய லியோ! எத்தனை கோடி தெரியுமா?

Leo Box Office Day 1: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 100 ரூபாய் கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 20, 2023, 09:26 AM IST
  • வசூல் சாதனை படைத்த லியோ.
  • முதல் நாளில் ரூ.140 கோடி வசூல்.
  • ஜெய்லர் சாதனையை முறியடித்துள்ளது.
Leo Box Office Day 1: முதல் நாளே ஜெய்லர் வசூலை மிஞ்சிய லியோ! எத்தனை கோடி தெரியுமா? title=

விஜய், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ள லியோ படம் இதுவரை இல்லாத அளவில் தமிழ் படங்களில் உலகளவில் மிகப்பெரிய முதல் நாள் வசூல் செய்து வரலாறு படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.74 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் வெளிநாட்டு வசூல் சுமார் 66 கோடி ரூபாய் ஆகும்.  தற்போது வெளியாகி உள்ள தகவலின் படம் ரஜினிகாந்தின் ஜெயிலரை முறியடித்து லியோ 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஓபனிங்கைப் பெற்றுள்ளது. உலகளாவிய முதல் நாளில் 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. நெல்சன் இயக்கி இருந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் வர்மா, யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடித்து இருந்தனர். 

மேலும் படிக்க - இணையத்தில் லீக் ஆன ‘லியோ’ படம்..! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

ரஜினியின் முந்தைய படங்கள், நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் சரியாக போகாததால் ஜெய்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.  ரசிகர்கள் எதிர்பாத்தபடி ஜெய்லர் உலகளவில் வசூல் சாதனை படைத்தது.  இதனை தற்போது லியோ முறியடித்து வருகிறது.  லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே மனோஜ் பரமஹம்சா மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் கையாண்டுள்ளனர்.  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்திற்கு அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கியது.

லியோ படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்தது இருந்தது.  லியோ உலகளவில் அட்வான்ஸ் புக்கிங் அடிப்படையில் ஏற்கனவே ரூ.100 கோடி சம்பாதித்துள்ளது. US மற்றும் UAE முன்பதிவுகளில் $1 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்து.  இந்தியாவில் முதல் நாளிலேயே இப்படம் 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இப்படம் கேரளாவில் சுமார் ரூ.7.25 கோடி வசூல் செய்துள்ளதாகவும், மேலும் அங்கு ஆல் டைம் நம்பர் ஒன் ஓப்பனர் இடத்தை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்குகில் மொத்தம் 12,63,432 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. லியோவின் 2டி தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பு முறையே 11,20,492 மற்றும் 1,35,190 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. படத்தின் IMAX தமிழ் பதிப்பில் இதுவரை 7,750 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மதுரை, கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், திருச்சி, சேலம், ஆலப்புழா, மைசூரு, வேலூர், திண்டுக்கல், மும்பை மற்றும் NCR ஆகிய இடங்களிலும் அதிகளவில் முன்பதிவு ஆகி உள்ளன.  அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ படத்துடன் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி மற்றும் சிவ ராஜ்குமாரின் கோஸ்ட் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது.  மேலும் அக்டோபர் 20 ஆம் தேதி ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் வெளியாகிறது.

மேலும் படிக்க - லியோ LCUல் இருக்கா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News