மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலை முயற்சி!!
பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி!!
பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி!!
Leaving Neverland என்ற ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆவணப்படத்தில் சிறு வயது குழந்தைகளை மைக்கேல் ஜாக்சன் தவறாக பயன்படுத்தியாக கூறப்பட்டிருந்தது.இந்த ஆவணப்படத்திற்கு மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் மைக்கேல் ஜாக்சனின் மகன் பாரிஸ் ஜாக்சன், இந்த ஆவணப்படத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் வசிக்கும் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன், நேற்று காலை கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. பின்னர், அவர், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படும் நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பொய் எனக் கூறியுள்ளார். இந்த தகவலைப் பரப்பியவர்கள் பொய்யர்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.