Jailer Release Live: ரஜினிகாந்தை விட அனிருத்திற்கு அதிகம் குவியும் பாராட்டு..! இசை வெள்ளத்தில் மிதந்த ரசிகர்கள்..!
Jailer Release Live Updates: ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் எப்படியிருக்கு..? படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன..? அனைத்தையும் சுட சுட தெரிந்து கொள்ளுங்கள்.
Jailer Release Live Updates: ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் இருந்து டிவிட்டர் விமர்சனம் வரை..படம் எப்படியிருக்கிறது என பார்ப்போம்.
கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்:
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதால் தூங்க முடியவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Latest Updates
ஜெயிலர் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் விமர்சனம்!
இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் படம் குறித்து பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மோகன் லால் வருகைக்கு தெறிக்க விட்ட திரையரங்கு..!
ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்ல் லாலும் நடித்துள்ளார். இவரது வருகைக்கு அனிருத் அமைத்துள்ள இசை திரையரங்கையே தெறிக்க விட்டதாக ஒரு ரசிகர் டிவிட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், நெல்சன் ஆகியோருக்கு கிடைப்பதை விட அனிருத்திற்கு அதிகம் பாராட்டு கிடைத்துள்ளது.
ஜெயிலர் படத்தை பாராட்டிய தெலுங்கு நடிகர்!
ஜெயிலர் படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்த்து விட்டு தெலுங்கு நடிகர் சிவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
“இனி கே.ஜி.எஃப் எல்லாம் இல்ல..ஜெயிலர்தான்”
ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இது நெல்சனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கே கம்பேக் படம் என்று தெரிவித்துள்ளார். மேலும், “இனி கே.ஜி.எஃப், பாகுபலி எல்லாம் கிடையாது ஜெயிலர்தான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயிலரின் கடைசி 10 நிமிடங்கள்..!
ஜெயிலர் படத்தின் கடைசி 10 நிமிடங்கள் மாஸாக இருந்ததாக ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெல்சன், பீஸ்ட் படத்திற்கு பிறகு ஜெயிலர் படம் மூலம் மாஸ் கம்-பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஹுக்கும் பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்த அனிருத்.
இசையமைப்பாளர் அனிருத், வெற்றி திரையரங்கிற்கு வந்திருந்தார். அங்கு ஹுக்கும் பாடல் பாடி எல்லோரையும் மகிழ்வித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை நேரில் பார்த்த அனிருத்!
ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், அப்படத்தை வெற்றி திரையரங்கில் நேரில் கண்டு களித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் முன்னரே ரிலீஸ் ஆன நிலையில், 9 மணியளவில் தமிழகத்திலும் இப்படம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருவிழா போல ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
விஜய் ரசிகர்களை ஒரு ரசிகர், வீண் விமர்சனங்களை பரப்ப வேண்டாம் எனக்கூறி டிவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர் படத்திற்கு விஜய் ரசிகர்கள் சிலர் வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். அதிலும் சிலர் பீஸ்ட் படத்துடன் ஜெயிலர் படத்தை ஒப்பிட்டு ட்விட்டரில் சண்டையிடுகின்றனர்.
“நல்ல திரைக்கதை-எல்லாமே நல்லா இருக்கு”
ஒரு ரசிகர் ஜெயிலர் படத்தின் இசை, காட்சிகள், கதை, நடிப்பு என அனைத்தயும் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அந்த ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், நடிகர் ரஜினிகாந்தை அமைதியான கதாப்பாத்திரத்தில் காண்பித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார், யோகி பாபு மற்றும் ரஜினிகாந்தின் காட்சிகள் நன்றாக வர்க் அவுட் ஆகியிருப்பதாகவும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனிருத்தின் இசை, ஹுக்கும் பின்னணி இசை என அனைத்தும் நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
”திரும்ப திரும்ப போய் பார்க்கலாம்..”
ஜெயிலர் படத்தை திரையரங்கிற்கு மீண்டும் மீண்டும் சென்று பார்க்கலாம் என ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“ரஜினிக்கு இன்னோரு பாட்ஷா”
ஜெயிலர் படம், ரஜினிகாந்திற்கு இன்னொரு பாட்ஷா படம் என ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் விமர்சனம்!
ஜெயிலர் படத்திற்கு ரசிகர் ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார். அதில், யோகி பாபு மற்றும் ரஜினியின் காம்போவில் படத்தில் காமெடி தெறிக்க்க விட்டிருப்பதாகவும், இடைவேளை காட்சியில் சண்டை காட்சி இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டாம் பாதியில் பல நடிகர்கள் கௌரவ தோற்றத்தில் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடைசியில் பெரிய ட்விஸ்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மொத்தத்தில் படம் மாஸாக இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
‘கபாலி’ அளவிற்கு கூட்டம்!
துபாயில் உள்ள ரசிகர் ஒருவர், ஜெயிலர் படத்திற்கு ‘கபாலி’ படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டம் அளவிற்கு தற்போதும் கூட்டம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வேலை நாளிலும் முதல் நாள் முதல் காட்சியான 4:30 மணி காட்சிக்கு, குடும்பம் குடும்பமாக பலர் திரையரங்கிற்கு வெளியில் லைன் கட்டி நிற்பதற்கு காரணம் ரஜினிகாந்த் என்றும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படம் தமிழகத்தில் மட்டும் லேட்டாக ரிலீஸ் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, சினிமா விமர்சகர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.