லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  ஆக்ஷன் திரைப்படமான இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை காண ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர், அதே சமயம் படத்தின் இயக்குனர் லோகேஷும் படம் குறித்து பல பேட்டிகளை அளித்து வருகிறார்.  சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியொன்றில், 1986ல் வெளியான 'விக்ரம்' படத்தின் கதாபாத்திரத்தை வைத்து தான் தற்போது உருவாகியுள்ள 'விக்ரம்' படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய்? உறுதி செய்த அட்லீ!


ஸ்பை த்ரில்லர் படமான இப்படம் குறித்து மேலும் கூறியவர், அந்த பழைய 'விக்ரம்' படத்திலுள்ள கதாபாத்திரங்கள் தற்போது இருந்திருந்தால், எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  பழைய படத்திலிருந்து கதாபாத்திரங்களையும் அவற்றின் பண்புகளையும் நான் சீர்குலைக்க விரும்பவில்லை, அதனை அப்படியே இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று கூறினார்.  மேலும் தான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகன் என்பதையும், அவரின் பழைய படங்கள் அனைத்தையும் நன்கு கவனித்து இருப்பதாகவும் கூறினார்.



இதிலிருந்து கதாபாத்திரங்களை எதுவும் சிதைக்காமல் அப்படியே தற்போது இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெரிகிறது, மேலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தில் சில மேம்பாடுகளை மட்டும் செய்து இருக்கிறார்.  ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் மேலும் முக்கியமான மூன்று கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.  


மேலும் படிக்க | நெட்பிளிக்சில் உள்ள சிறந்த டாப் 5 வெப் சீரிஸ்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR