பட்டையைகிளப்பும் லவ்வர் பட வசூல்! OTT ரிலீஸ் எப்போது தெரியுமா ?
Manikandan`s Lover OTT Release Date : சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் வசூலில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் கமெண்ட் பெற்று வருகிறது. மேலும் லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி: சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் வசூலில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் கமெண்ட் பெற்று வருகிறது. மேலும் லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எந்த தளம் ? எப்போதிலிருந்து ? முழு விவரம் இதோ...
நடிகர் மணிகண்டன் :
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குள் பிரவேசித்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மணிகண்டன். முதல் முறையாக விஜய் டிவி நடத்திய கலக்கப்போவது யாரு என்கிற காமெடி ஷோவில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். இதன் பிறகு, சில குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர், டப்பிங் ஸ்டுடியோவில் குரல் கொடுக்கத் தொடங்கிய அவர், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா 2 திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் இந்தியா பாகிஸ்தான், இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
மேலும் படிக்க | இது எனக்கு மறக்க முடியாத நாள்! நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!
குறிப்பாக காலா திரைப்படத்திற்கு இவர் எழுதிய வசங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு முன்னர் விக்ரம் வேதா திரைப்படத்திற்கு இவர் எழுதிய வசங்களும் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், பாராட்டுகளையும் பெற்றார். இதன் பின்னர் சில்லு கருப்பட்டி படத்தில் தான் முதல்முதலில் ஹீரோவாக இவர் அப்கிரேட் ஆகி அறிமுகமார். தொடர்ந்து நெற்றிக்கண், ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற சில திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார், இதில் குறிப்பாக ஜெய்பீம் படத்தில் நடித்து இவர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். மணிகண்டன் கடந்த ஆண்டு நடித்திருந்த படம், குட் நைட் ஆகும். குறட்டை விடும் பிரச்சனை கொண்ட ஒரு சாமாணியன், தனது வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பது பாேன்ற கதையை இதில் காண்பித்திருப்பர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், நல்ல வசூலை ஈட்டி விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்தது.
லவ்வர் மணிகண்டன் :
இதனிடையே குட் நைட் படத்தை தயாரித்த நிறுவனம் மீண்டும் மணிகண்டனை வைத்து தயாரித்த திரைப்படம் லவ்வர். இந்த படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாது. இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டனுடன் இந்த படத்தில் ஸ்ரீ கெளரி பிரியா நாயகனாக நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படத்திற்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு மற்றும் ஆதரவு கிடைத்து வருகிறது. அதனுடன் வசூல் ரீதியாகவும் பாசிடிவான நிலவரம் பெற்றுள்ளது லவ்வர்.
லவ்வர் படத்தின் OTT ரிலீஸ் அப்டேட் :
இந்நிலையில் தற்போது லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது. அந்த வகையில் திரையரங்குகளில் ரிலீசான ஒரு மாதத்தில் லவ்வர் திரைப்படம் OTTயில் ரிலீஸாவது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ