சேலத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த பிரபல திரைப்பட இயக்குனர் ஸ்ரீ ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அவர் கூறும்போது, "எனக்கு இன்று கனவு ஏதுமில்லை, மனதில் பட்டதை திரைப்படமாக எடுக்கிறேன். இளம் இயக்குனர்களை எனது சமகால படைப்பாளிகளாக தான் பார்க்கிறேன், அவர்கள் மிகவும் பரபரப்பான ஆக்சன் படங்கள் மற்றும் நுண்ணுணர்வான படங்களையும் இந்த வயதில் துணிந்து எடுப்பதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர்களுக்கு முன்பாக திரையுலகுக்கு வந்தாலும் சமகாலத்தில் பயணிப்பவர்கள் என்ற முறையில் அவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரம் திரைப்படம் வெளியான போது அதிக விளம்பரம் இல்லாமல் மாமனிதன் திரைப்படம் வெளியானது. 40% பார்வையாளர்கள் மட்டுமே பார்த்த மாமனிதன் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. உலக நாடுகளில் மாமனிதன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் முதல் தொடக்கம் தான் டோக்கியோ நகரில் சிறந்த ஆசியா படம் என மாமனிதன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் திரைக்கதையை கேட்டு விட்டு நடிக்கிறேன் என்று கூறியதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. 



மேலும் படிக்க | 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட தமன்!


அடுத்து இடிமுழக்கம் என்னும் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதன்பின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். நீட் தேர்வை கண்டு மாணவ மாணவிகள் பயப்படக்கூடாது. டாக்டர் இல்லை என்றால் மருத்துவத்துறையில் வேறு படிப்புகள் உள்ளன, அதனை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம்.  தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். தன்னை வளர்த்த பெற்றோர்களை நிரந்தர சோகத்திற்கு மாணவர்கள் தள்ளக்கூடாது. கனவு ஈடேறாத போது மாணவர்கள் அது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது. தற்கொலை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது" என்று கூறினார். 



மேலும் படிக்க | VICTIM ஆந்தாலஜி எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ