Maamannan: கடந்த சில நாள்களாகவே மாமன்னன் Fever சமூக வலைதளம் முழுவதும் அனல் பறந்துவந்த வேளையில், இத்திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. மாமன்னன் திரைப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கியதில் இருந்தே டிக்கெட் விற்பனை சூடுபறந்தது என்றுதான் கூறவேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் நாளான இன்றே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி வரும் சூழலில், வரும் நாள்களில் இத்திரைப்படம் அதிக வசூலை குவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூல் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. 


அந்த வகையில், முதல் நாளான இன்று மாமன்னன் படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு காட்சி திரையிடலில் பங்கேற்றனர். இதில், படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வருகை தந்தனர். உதயநிதியின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதியும் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.


திரையிடலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"மாமன்னன் படத்தின் இந்த முழு வெற்றியும் மாரி செல்வராஜையே சேரும். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்தோம். எனது கடைசி படமான இந்த படமே எனக்கு முழுவதுமாக பூர்த்தி செய்தது. இதற்கு மேல், படம் நடிக்க 'வாய்ப்பில்லை ராஜா'. 


மேலும் படிக்க | மாரி செல்வராஜின் சம்பவமா? மாரி செல்வராஜிற்கு சம்பவமா? ‘மாமன்னன்’ ட்விட்டர் விமர்சனம்..!


இந்த ஒரு படத்தில் நாங்கள் சமுதாயத்தை திருத்த போகிறோம் என்று சொல்லவில்லை. எங்கள் வலியை சொல்கிறோம், அதை மக்கள் புரிந்து உணர வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும். நிறைய வேலைகள் இருக்கிறது. இனிமேல் படங்கள் நடிப்பதில் வாய்ப்பில்லை" என்றார். 


இந்த படத்தில் இருக்கக்கூடிய கட்சி உங்கள் கட்சி போன்று உள்ளது என்று கேட்டதற்கு,"எந்த கட்சியாக இருந்தாலும் தப்பு செய்தாலும் தப்பு தப்புதான்" என பதிலளித்தார். பக்ரீத் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷிடம், உதயநிதி ஸ்டாலின் பிரியாணி கேட்டு கேலி செய்தார். 


தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்,"இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்ல நினைத்ததை சொல்ல நினைத்திருக்கிறார். ஒரு நல்ல விஷயம் நடக்க இது தொடக்கமாக இருக்கும். ஒரு நாய்க்குட்டியை தூக்குவதும், ஒரு நாய்க்குட்டியை தூக்குவதுதிலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. பன்றிகுட்டியும் ஒரு நல்ல மிருகம் தான் அதை தூக்குவதில் எந்த தப்புமில்லை. இந்த விஷயம் எல்லோருக்கும் போய் சேர வேண்டும்" என்றார். 


மாமன்னன் படத்தில் தற்போதைய தேர்தல் அரசியலில் பட்டியலின தலைவர்களின் நிலை குறித்தும், அதில் ஏற்பட வேண்டிய தேவை குறித்தும் உரையாடலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, திராவிட கட்சிகளிலும் கூட நிலவும் ஜாதிய பாகுபாடு, தேர்தல் அரசியல் கருப்பு பக்கங்களையும் மாமன்னன் திரைப்படம் கேள்விக்கேட்க தவறவில்லை. 


இத்திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அபாரமாக நடித்துள்ளனர். படத்தின் இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் வேலைகள் என அனைத்தும் தரமாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்? மாமன்னன் திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ