உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ திரைப்படம் நாளை (ஜூன் 29) வெளியாக உள்ளது. படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது உதயநிதி பேசியது இன்னொரு பேசுபொருளாக மாறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழாம் அறிவு படத்தில் சர்ச்சைக்குரிய வசனம்..


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான படம், ஏழாம் அறிவு. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில், டி.என்.ஏ ஆராய்ச்சி குறித்த ஒரு காட்சி குறித்து விவாதிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அப்போது, நாயகி தமிழர்களின் அடக்குமுறை குறித்தும் தமிழர்கள் வெவ்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வது குறித்தும் பேசியிருப்பார். “Corruption, Recommendation, Reservation..இதனாலதான் திறமை இருக்குறவன் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி போறான்..” என அந்த படத்தில் டையலாக் இடம் பெற்றிருக்கும். இதைப்பார்த்து தன்னிடம் சூர்யா பேசிய விஷயங்களை உதயநிதி ஸ்டாலின் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 


காட்சியை நீக்க சாென்ன சூர்யா..


ஏழாம் அறிவு படத்தில் இடம் பெற்றிருந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிரான டைலாக்கை நீக்க வேண்டும் என சூர்யா தன்னிடம் கூறியதாக உதயநிதி கூறியுள்ளார். அப்போது தனக்கு பெரிதாக அரசியல் குறித்த படிப்பினை இல்லாததால் அந்த டைலாக்கை நீக்காமல் விட்டுவிட்டதாகவும் அதற்காக இப்போது மிகவும் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 


மேலும் படிக்க | “நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?


மாமன்னன் படம் குறித்து தனுஷ் விமர்சனம்..


கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்து வரும் தனுஷ், மாமன்னன் படத்தை பார்த்ததுள்ளார். மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவையும் பாராட்டி தள்ளி ஒரு ட்விட்டர் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் கீர்த்தி, உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் என அத்தனை பேரும அருமையாக நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏ.ஆர் ரஹ்மானின் இசை அற்புதமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், படம் மிகவும் நன்றாக இருக்குமோ என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


சர்ச்சைகளை தாண்டி நாளை ரிலீஸ்..


மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்து ஒரு நேர்காணலில் மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார். இது பெரும் புயலாக வெடித்த நிலையில், அதற்கு பின்னர் விளக்கம் கொடுத்தார். ஆனாலும், படத்திற்கு தடை காேரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரனையில் படத்திற்கு தடை போட முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு இன்னல்களை கடந்து கடைசியாக மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. 


படக்குழு..


மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கம்யூனிஸ்டு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபகத் ஃபாசில் கிராமத்து வில்லன் கதாப்பாத்திரத்திலும், வடிவேலு கிராமத்து பெரியவர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் படம் என்பதால் கண்டிப்பாக கணமான கதையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


மேலும் படிக்க | மாமன்னன் படத்தை பாராட்டி தள்ளிய தனுஷ்..! படம் சூப்பரா இருக்குமோ..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ