“நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?

Na Ready Song: லியோ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நான் ரெடி’ பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து லியாே படக்குழு எச்சரிக்கை வாசகத்தை இணைத்துள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2023, 10:53 AM IST
  • சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்த பாடல் ‘நான் ரெடி’
  • இதில் புகைப்பழக்கத்தை ஆதரிப்பதாக கூறி போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
  • இதயடுத்து படக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
“நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?  title=

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் விஜய் நடித்திருந்த ‘நான் ரெடி’ பாடல் விஜய்யின் பிறந்தநாளையாெட்டி வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இந்த பாடலில், நடிகர் விஜய் வாயில் சிகிரெட்டுடன் இருக்கும் போட்டோக்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதற்கு சமூக நல ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

‘நான் ரெடி’ பாடல்..

உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள விஜய், கடந்த 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ படக்குழு “நான் ரெடிதான் வரவா..” பாடலை லிரிக்கல் வீடியோவாக வெளியிட்டிருந்தது. இதில், விஜய் சிகிரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்தது. ஆனால், சமீபத்தில்  இந்த பாடல் குறித்த சர்ச்சை எழுந்தது. 

மேலும் படிக்க | விஜய்யுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்? ‘வடசென்னை’ இயக்குநர் சொன்ன இனிப்பான தகவல்..!

போலீஸில் புகார்..

விஜய்யின் ‘நான் ரெடி’ பாடல் ரசிகர்களின் ஆதரவை பெற்று பல மில்லியன் வியூஸ்களை கடந்ததை தாெடர்ந்து இது குறித்து ஒரு நபர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், 'நான் ரெடி தான் வரவா' பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்தார். மேலும், நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்தார். 

வலுக்கும் எதிர்ப்புகள்..

‘நான் ரெடி’ பாடல் மீது ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து, பல சமூக நல ஆர்வலர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளை எதிர்ப்புகளாக தெரிவித்தனர். இப்படி தொடர்ந்து பல்வேறு தரப்பகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து, படக்குழு அந்த பாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது. 

எச்சரிக்கை வாசகம் இணைப்பு…

முதலில் வெளியான லிரிக்கல் வீடியோவில் வரும் புகைப்படங்களும் பாடல் வரிகளும் மட்டும் வந்த நிலையில் தற்போது அதில் படக்குழு சிறிய மாற்றத்தை செய்துள்ளது. ‘புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற எச்சரிக்கை வாசகத்தைதான் படக்குழு அதனுடன் இணைத்துள்ளது. 

Na Ready

 

லோகேஷ் கனராகஜ் படத்தில் போதைப்பொருட்கள்தான் முக்கிய கதாப்பாத்திரம்…

பல லட்சம் இளைஞர்களுக்கு சமீப காலங்களில் மிகவும் பிடித்த இயக்குநராக இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கியுள்ள பெரும்பாலான படங்களில் போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இருக்காது. கைதி, மாஸ்டர், விக்ரம் என எல்லா படங்களிலும் போதை பொருட்கள் கடத்தம் கேங்க்ஸ்டரை வில்லனாகவும் அதைத்தடுக்க போராடுபவனை ஹீரோவாகவும் காண்பித்திருப்பர். சொல்லப்போனால் இவரது ஒட்டுமொத்த எல்.சி.யூவே போதை பொருட்களை சுற்றித்தான் சுழலும். நடிகர் விஜய்யை வைத்து இவர் இயக்கி வரும் லியோ படத்திலும் போதை பொருள்தான் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. 

இதுதான் விஜய்யின் கதாப்பாத்திரமா? 

லியோ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தளக்கோனா அருவிப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. நடிகர் விஜய், இப்படத்தில் வனத்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில நடைப்பெறும் படப்பிடிப்பில் செம்மரங்களை கடத்தி வரும் கும்பலை மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | லியோவில் வனத்துறை அதிகாரியாக நடிக்கும் விஜய்? ஆந்திராவில் லீக்கான வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News